Wednesday, July 25, 2018

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை | RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN INDIAN OVERSEAS BANK

சென்னையைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 20 மேலாளர், சீனியர் மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  20

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Manager (Information Security) - 04

பணி: Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

பணி: Senior Manager (Information Security) - 04

பணி: Senior Manager (Information System Audit) - 06

வயதுவரம்பு: 25 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேலாளர், சீனியர் மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக் அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, எஸ்சி,எஸ்டி பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iob.in என்ற அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iob.in/upload/CEDocuments/RECRUITMENT-IS-AUDIT-20072017.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...