Sunday, July 29, 2018

"என்சிசியில் சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை | Recruitment in Indian Army with NCC Certificate

என்.சி.சி. 45-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. ’சி’ சான்றிதழ் பெற்ற வீரர்கள் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் இந்திய ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமான மற்றும் திருமணமாகாத இந்திய குடியுரிமை பெற்ற இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 55 (ஆண்கள் - 50, பெண்கள் - 05)

வயது:  19 - 25க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.01.1994 மற்றும் 01.1.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். என்.சி.சி. பயிற்சியில் ’சி’; சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும்ம் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்டவர்களுக்கு தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு இரு நிலைகளில் தேர்வுகள் மற்றும் குழு தேர்வு, உளவியல் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு செய்யப்படுபவர்கள் 49 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.joinindianarmy.nic.in

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...