தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள 309 காவல் உதவி ஆய்வாளர் (சார்பு ஆய்வாளர்) பணியிடத்துக்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணைய தளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், 044-4001 6200, 044 - 2841 3658, 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு பேசலாம். இந்த உதவி மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். அதேபோல் அனைத்து மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களும் உதவி மையம் செயல்படுத்தப்படும்.
இந்த தேர்வு இருகட்டமாக நடத்தப்படும். முதலில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வித் தகுதிக்கும், சிறப்பு மதிப்பெண்ணுக்கும் தலா 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். இத்தேர்வில் காவல் துறையினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment