Wednesday, July 18, 2018

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை | Walk-In Interview Project Assistant (Social Work) and Data Entry Operator

தேசிய நோய்தொற்றியல் நிறுவனத்தின் கீழ் மாதிரி கிராமிய சுகாதார ஆராய்ச்சி பிரிவில் (திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இணைக்கப்பட்டுள்ளது) முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான திட்ட உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Project Assistant (Social work) - 01

தகுதி: சமூக அறிவியல், நோய்தொற்றியல், புள்ளியியல் துறைகளில் இளங்கலைப் பட்டத்துடன் சம்பந்தப்பட்ட பணியில் மூன்றாண்டு அனுபவம் அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பதவி: Data Entry Operator - 01

கல்வித் தகுதி: பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்புடன், ஆங்கில தட்டச்சில் ,தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: www.nie.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Model Rural Health Research Unit, 
Govt.Primary Health Centre, Kallur, 
Tirunelveli District, Tamil Nadu.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிகள்: 19.07.2018 மற்றும் 20.07.2018.

மேலும் விவரங்களுக்கு: : http://nie.gov.in/images/careers/Recuritment_MRHRU_101.pdf

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...