நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை | RECRUITMENT OF ASSISTANTS IN THE NEW INDIA ASSURANCE COMPANY LIMITED
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 685 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 685 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உளஅளவர்களிடமிருந்து வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 685 (தமிழகத்திற்கு - 83)
பணி: Assistant - 685
சம்பளம்: மாதம் ரூ.14,435 - 40,080
வயது வரம்பு: 30.06.2017-ஆம் தேதியின்படி 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். மாநிலம் மற்றும் மத்திய ஆட்சிப் பகுதியில் பேசப்படும் பிராந்திய மொழியில் நன்கு பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மண்டல மொழித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளாக தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மண்டல மொழியறிவு சோதனைக்குப் பின்பு பணியில் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.newindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2018
முதல்நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8,9-ஆம் தேதிகளிலும், முதன்மைத் தேர்வு அக்டோபர் 6-ஆம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
Join the conversation