Sunday, July 29, 2018

சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் வேலை | Engagement of Apprentice in Integral Coach Factory

சென்னை பெரம்பூரில் செயல்பட்டு வரும் ஐசிஎப் எனப்படும் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அளிக்கப்பட 707 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அப்ரண்டீஸ் பயிற்சி

காலியிடங்கள்: 707

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. கார்பெண்டர் - 54
2. எலக்ட்ரீசியன் -116
3. பிட்டர் - 230
4. மெஷினிஸ்ட் - 48
5. பெயிண்டர் - 30
6. வெல்டர் - 219
7. எம்.எல்.டி. ரேடியாலஜி, எம்.எல்.டி. பேதாலஜி - 04
8. பி.ஏ.எஸ்.ஏ.ஏ. - 02

வயது வரம்பு: 01.10.2018 தேதியின்படி 15 வயது பூர்த்தி அடைந்தும் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்தவர்களும், சில பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள், உடல்தகுதிகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icf.indianrailways.gov.in

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...