மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பயிற்சி இடங்கள்: 90
பயிற்சி இடம்: நெய்வேலி
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter fresher - 20
2. Electrician fresher - 20
3. Welder fresher - 20
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
4. MLT. Pathology fresher - 10
5. MLT. Radiology fresher - 05
தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் எம்எல்டி முடித்திருக்க வேண்டும்.
6. Technician Apprentice (Pharmacist) - 15
தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் மருந்தியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் பதுச்சேரி மாநிலத்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: நாளை புதன்கிழமை (ஜூலை 4) மாலை 5 மணிக்குள் www.nlcindia.com என்ற இணையதளத்தில் ON LINE REGISTRATION FORM-ல் பூர்த்தி செய்து விண்ணப்படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கையொப்பமிடப்பட்ட விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிசான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரரின் வாரிசு அல்லது மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் அவற்றின் நகல்களை இணைத்து வரும் 09.07.2018 அன்று மாலை 5 மணிக்குள் அஞ்சல் மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
துணை பொதுமேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
வட்டம்- 20, நெய்வேலி - 607803.
பயிற்சிக்கும் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பட்டியல் www.nlcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய :https://www.nlcindia.com/new_website/careers/FRESHER-NET%20Advt_No_L&DC_012018.pdf
No comments:
Post a Comment