Saturday, March 31, 2018

ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன்


ஐ.ஐ.எஸ்சி., அட்மிஷன்:

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (ஐ.ஐ.எஸ்.சி.,) கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தகுதிகள்: 

12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஜே.இ.இ மெயின், ஜே.இ.இ அட்வான்ஸ், நீட் ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

அரசு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.

சேர்க்கை முறை: ஐ.ஐ.எஸ்.சி., கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கென தனி நுழைவு தேர்வுகள் ஏதும் நடத்தப்படுவதில்லை. அரசு தகுதி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கே இந்த நிறுவனத்தில் அட்மிஷன் வழங்கப்படுகிறது. தகுதி தேர்வுகளின் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்குள் அந்த மதிப்பெண்களை, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தில் ‘அப்டேட்’ செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30

விபரங்களுக்கு: http://iisc.ac.in/

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...