Tuesday, March 20, 2018

'நெட்' தேர்வு அறிவிப்பு

சி.எஸ்.ஐ.ஆர்., (சென்டர் பார் சயின்டிபிக் அண்டு இண்டஸ்ட்ரியல் ரிசர்ச்) அமைப்பு, என்பது அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம். இதன் கிளை நிறுவனமாக ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் குரூப் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சார்பாக யூ.ஜி.சி.,யுடன் இணைந்து தேசிய தகுதித் தேர்வு (நெட்) நடத்தி ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாடப் பிரிவுகள்:

 கெமிக்கல் சயின்ஸ், எர்த், அட்மாஸ்பெரிக், ஓஷன் மற்றும் பிளானடரி சயின்ஸ், லைப் சயின்ஸ், மேதமேடிக்கல் சயின்ஸ், பிசிக்கல் சயின்ஸ் ஆகிய பிரிவுகள் இத்தேர்வில் அடங்கும்.

வயது: 

ஜன., 1, 2018 அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர் களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

தொடர்புடைய பிரிவுகளில் எம்.எஸ்சி., படித்தவர்கள், பி.இ., பி.டெக்., பி.பார்ம், எம்.பி.பி.எஸ்., போன்றவற்றைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

தேர்வு நாள்: 

எழுத்துத்தேர்வு ஜூன் 17, 2018 அன்று நடைபெறும். தமிழகத்தின் சென்னை, காரைக்குடி உள்ளிட்ட நாட்டின் 27 மையங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம்:  ரூ.1000

கடைசி நாள்: மார்ச் 26, 2018 

விபரங்களுக்கு : http://csirhrdg.res.in/notification_main_june2018.pdf

No comments:

Post a Comment

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...