Saturday, March 17, 2018

கண் பராமரிப்பு

கண் பராமரிப்பு:


தினமும் காலை எழுந்தவுடன் சூரியனை பார்த்து நின்று கொண்டு இரு கண்களையும் மூடி(கைகளால் அல்ல,இமைகளால் மூடி) இடது பக்கம் மூன்று முறை வலது பக்கம் மூன்று முறை சுழற்ற வேண்டும்.இவ்வாறு தினமும் செய்தால் கண் பார்வை கூர்மை ஆகும். 

கண்கள் பராமரிப்பில் மிக முக்கியமானது கண்களின் ஓய்வு , தூக்கம். பகலில் உறங்குவது அல்ல, இரவில் நிம்மதியாக நித்திரை கொள்வது. முடித்த மட்டும் எட்டு மணிநேர உறக்கம் கொள்வது கண்களுக்கு நல்ல ஓய்வை கொடுக்கும்.

அடுத்தது நீர் நல்ல சுத்தமான குடிநீர் தினம் தோறும் தேவையினை அளவு குடிநீர் அருந்துதல் அவசியமாகிறது.

கண்களுக்கு வைட்டமின் “ஏ” மிக நல்லது. கண்களில் உள்ள அணைத்து பாகங்களும் நன்றாக இயங்க இந்த வைட்டமின் “ஏ” உதவுகிறது. அதனால் வைட்டமின் “ஏ” நிறைந்த கேரட், கீரை வகைகள், மீன், முட்டை போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து இமை மற்றும் புருவத்தில் தடவி வர கண்கள் வறட்சி நீங்கும். மேலும் புருவம் மற்றும் இமைகளில் உள்ள முடிகள் நன்கு வளரும். கண்கள் அழகும் ஆரோக்கியமும் பெறும்.

கண்கள் சுற்றி வட்ட வடிவில் ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால்,கண்களின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறும். சுருக்கங்கள் மறையும்.

கண்கள் அழகு அதன் புருவமுடன் சேர்ந்தது. நல்ல அடர்த்தியான வில் போன்று வளைந்த புருவம் தான் முக அழகை கூட்டும். நல்ல அழகான புருவம் பெற, விளக்கெண்ணெய், கரிசிலாங்கண்ணி எண்ணெய் தலா ஐந்து சொட்டு எடுத்து, நெல் உமி சேர்த்து கலந்து புருவத்தில் தடவி, நன்கு மஜாஜ் செய்து, முப்பது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியில் துடைக்கவும். இப்படி வாரம் மூன்று முறை செய்தால் புருவம் நன்கு அடர்த்தி பெறும்.

கண்கள் நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டவை. ஆகவே தினம் கண் பயிற்சி மிக முக்கியம் தலையை நேர வைத்து, இரண்டு கட்டை விரல்களை சேர்த்து வைத்து கொண்டு தலையை ஆட்டாமல், கைகளை மேலும் கீழுமாக, இடது வலதுமாக நகர்தல் வேண்டும். தலையை ஆட்டாமல், கை அசைவிற்கு பார்வையை மட்டும் நகர்த்துதல் வேண்டும். இதனால் கண்களின் அனைத்து பாகங்களும் நன்கு செயல்பட்டு புத்துணர்வு பெறும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...