Saturday, March 17, 2018

பெர்முடா முக்கோணத்தின் மர்மம்



பெர்முடா முக்கோணத்தின் மர்மம்:




என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதனால் பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள், விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது. இதற்கான விடை இப்போது கிடைத்துவிட்டது

உலகில் விலகாத, விடைக் கிடைக்காத மர்மங்களும், மர்ம முடிச்சுகளும் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் பல கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கிய சூரனாக திகழும் மர்மம் தான் பெர்முடா முக்கோணம். மியாமி, பெர்முடா தீவு மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவுக்கு இடையே அமைந்திருக்கும் மிகப்பெரிய கடல் பரப்பளவு தான் பெர்முடா முக்கோணம்.

இங்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது, எதனால் இதைக் கடலில் கடக்கும் கப்பல்கள், வானத்தில் கடக்கும் விமானங்கள் உள்வாங்கி மறைகின்றன என்பது பெரும் மர்மமாக விளங்கி வந்தது. அதற்கான பதிலை தான் இப்போது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப் பிடித்துள்ளனர்.

மேகங்கள்:

பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் தான் அங்கு நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றை கில்லர் க்ளவுட்ஸ் என்றும் கூறுகின்றனர்.

170 மைல் வேகம்:

பெர்முடா முக்கோணத்தின் மேல் இருக்கும் மேகங்கள் அறுங்கோண வடிவில் (Hexagonal) அமைந்திருக்கின்றன. மேலும், அங்கு காற்று மணிக்கு 170 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இதன் காரணத்தால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்கள் உள்வாங்கின என்றும் ஆராய்ச்சியார்கள் கூறுகின்றனர்.

22 - 55 மைல் அகலம்:

பெர்முடா பகுதியில் அறுங்கோண வடிவில் அமையும் மேகங்கள் ஏறத்தாழ 20 -55 மைல் தூர அகலத்தில் அமைகின்றன. இவை பெர்முடா முக்கோணத்தின் மேற்கு பகுதியில் தான் பெரும்பாலும் அமைகிறது. இவ்விடம் தான் மிகவும் அபாயமானது என மக்கள் கருதி வந்தனர். இங்கு சில மேகங்கள் நேர் கோடு வடிவில் அமைகின்றன. இது அசாதாரணமானது ஆகும்.

45 அடி அலைகள்:

மணிக்கு 170 மைல் வேகத்தில் 45 அடி உயரத்தில் அலைகள் அடித்தால் எப்படி இருக்கும். அப்படி தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் அலைகள், புயல் மற்றும் மேகத்தின் தாக்கத்தினால் உருவாகின்றன.

முடிவு:

இந்த காரணங்களினால் தான் பெர்முடா முக்கோணம் பகுதியில் பல மர்மமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியோ, நீண்ட காலமாக விடை இன்றி இருந்த மர்மத்திற்கு விடை கிடைத்துவிட்டது.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...