Monday, March 26, 2018

கறவை மாட்டு பாலில், புரதச்சத்து அதிகரிக்க

பாலில் புரதச்சத்து குறைவாக இருந்தால், அதன் விலை குறைந்து விடும். எனவே, கறவை மாடுகளுக்குப் புரதச்சத்துள்ள தீவனங்களைக் கொடுக்க வேண்டும்.

பாலில் புரதச்சத்து குறைவாக உள்ளதை, விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள முடியும். பால் கறக்கும் போது, நுரை வந்தால் தான், புரதச்சத்து நன்றாக இருக்கிறது என, அர்த்தம்.
நுரையில்லாமல் தண்ணீர் போல இருந்தால், புரதச் சத்து பற்றாக்குறை உள்ளதை புரிந்து கொள்ளலாம். புண்ணாக்கு, பருத்திக் கொட்டை போன்ற வற்றை தீவனமாக கொடுத்து, இதை சரி செய்ய முடியும்.

தவிர, 'டானின்' - சுருங்கிய வடிவில் உள்ள புரதம், சவுண்டல், சூபாபுல், கிளரிசீடியா, வாத நாராயணா போன்ற மரங்களின் இலைகளையும் தீவனமாக கொடுக்க வேண்டும்.இவற்றை புறவழி புரதங்கள் என்பர். இவை மாட்டின் இரைப்பையில் உள்ள நான்காம் அறையில் தங்கி, செரிமானம் ஆகும்; இதனால், பாலில் புரதம் கூடும். 

பாலில், எஸ்.என்.எப்., என்று சொல்லப்படும், கொழுப்பு தவிர, பிற சத்துக்களின் அளவு குறைவாக இருந்தால், தாது உப்புக் கலவையை கொடுக்க வேண்டும்.சிலர் இதை, தீவனத் தொட்டியில் கொட்டி விடுகின்றனர்; அது தவறு. அப்படி செய்வதால், தொட்டியின் அடியில் இவை தங்கி, மாடுகளுக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் கிடைக்காது.இதை தவிர்க்க, தீவனத்துடன் தாது உப்புக்களை நன்றாக பிசைந்து, அதனுடன், 50 கிராம் சமையல் சோடா உப்பையும் கலந்து கொடுக்க வேண்டும். 

இந்தத் தீவனத்தை தொடர்ந்து கொடுக்கும் போது, ஒரு வாரத்திலேயே பாலில் மாற்றம் தெரியும். இந்தத் தீவன முறையை தொடர்ந்து பின்பற்றினால் பாலில் புரதச்சத்து அதிகரிப்பதுடன், மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...