Monday, March 26, 2018

சிறுநீரக கற்களை கரைக்கும் ஜூஸ்

ஒருவருக்கு சிறுநீரக ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. சிறுநீரகத்தில் சிறு பிரச்சனை என்றாலும், உடலில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து, நாளடைவில் பெரும் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதிலும் சிறுநீர கற்கள் வந்தால், அதனால் தாங்க முடியாத அளவில் கடுமையான வலியை உணரக்கூடும்.

சிறுநீரக கற்கள் வருவதற்கு அளவுக்கு அதிகமாக கால்சியம் சத்து தேங்குவது தான் காரணம். சிறுநீரக கற்களைக் கரைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் அதிகளவு நீரைப் பருகுவது, பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.


சில நேரங்களில் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்து வருவதன் மூலமும், சிறுநீரக கற்கள் வருவதையும், ஏற்கனவே இருக்கும் சிறுநீரக கற்களைக் கரைக்கவும் முடியும்.


தேவையான பொருட்கள்:


ஆரஞ்சு - 1
ஆப்பிள் - 1
தர்பூசணி - 4 துண்டுகள்
எலுமிச்சை - 1
ஐஸ் கட்டிகள் - 4


தயாரிக்கும் முறை:


ஆப்பிளை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். ஆரஞ்சு பழத்தின் தோலுரித்து, விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் இரண்டையும் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் தர்பூசணி மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து மீண்டும் அரைத்து, ஐஸ் கட்டிகளை சேர்த்தால், ஜூஸ் ரெடி!


இந்த ஜூஸை ஒரு நாளைக்கு இரண்டு வேளை குடிக்க வேண்டும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும், மாலையில் ஒரு டம்ளரும் குடிப்பது நல்லது.


ஜூஸின் நன்மைகள்:


இந்த ஜூஸில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்களை உடைப்பதில் மிகவும் சக்தி வாய்ந்தது. மேலும் இது உடலில் கால்சிய தேக்கத்தைக் குறைக்கும். மேலும் இந்த ஜூஸில் உள்ள தர்பூசணியில் நீர்ச்சத்தும், பொட்டாசிய சத்தும் உள்ளது. இதுவும் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவும்.


சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸை குடித்து வந்தாலும், கற்கள் கரையும்.

No comments:

Post a Comment

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியி...