Tuesday, July 31, 2018

இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் : சான்றிதழ் சரிபார்ப்பு | TNPSC 8 A Certificate Verification

இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஆகஸ்ட் 9-இல் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி 8-ஏ-இல் அடங்கிய செயல் அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 20-இல் நடைபெற்றது. அதில் 271 பேர் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விகிதாச்சாரம் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9-ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் | Vacancies details in Government Schools

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஸ்வாஹா அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்க நிலை, உயர் நிலை பள்ளிகளில் மொத்தம் 51,03,539 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அந்த பணியிடங்களில், 9,00,316 காலியாக உள்ளன.

தொடக்க நிலை பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில், உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

அந்த மாநிலத்தில் 2,24,327 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கடுத்து பிகார் 2-ஆவது இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 2,03,934 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சிக்கிம், ஒடிஸா, கோவா ஆகிய மாநிலங்கள் அதற்கடுத்து உள்ளன.

உயர் நிலை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக இருக்கும் மாநிலங்கள் பட்டியலில் ஜம்மு-காஷ்மீர் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட 25,657 பணியிடங்களில், 21,221 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பட்டியலில் பிகார் 2ஆவது இடத்திலும், ராஜஸ்தான் 3ஆவது இடத்திலும் உள்ளன என்று குஸ்வாஹா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் தற்போதைய நிலை குறித்த கேள்விக்கு குஸ்வாஹா அளித்துள்ள பதிலில், 7 சதவீத பள்ளிகளில் முக்கிய பழுது பணி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Sunday, July 29, 2018

மத்திய தாது வள நிறுவனத்தில் வேலை | RECRUITMENT FOR VARIOUS POSTS IN MECL

எம்.இ.சி.எல் என அழைக்கப்படும் பொதுத்துறை நிறுவனமான மத்திய தாதுவள ஆராய்ச்சி கழக நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 245 துணை பொதுமேலாளர், மேலாளர், உதவியாளர், மெக்கானிக், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  245

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Deputy General Manager (Finance) - 01
பணி: Manager - 03
பணி: Assistant Manager - 07
பணி: Accounts Officer - 03
பணி: Procurement &Contract Officer - 01
பணி: Foreman (Drilling) - 30
பணி: Technical Assistant (Survey & Draftsman) - 06
பணி: Hindi Translator - 01
பணி: Accountant - 03
பணி: Stenographer - 10
பணி: Technician (Drilling) - 41
பணி: Machinist - 12
பணி: Operator (Computer) - 07
பணி: Assistant (HR) - 29
பணி: Technician (Survey & Draftsman - 06
பணி: Assistant (Hindi) - 01
பணி: Assistant (Materials) - 18
பணி: Technician (Sampling) - 08
பணி: Assistant (Accounts) - 15
பணி: Library Assistant - 02
பணி: Electrician - 02
பணி: Mechanic - 09
பணி: Jr. Driver - 30

வயது வரம்பு: 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக். முடித்தவர்கள் அதிகாரி தரத்திலான பணிகளுக்கும், இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் டிப்ளமோ, ஐடிஐ, தட்டச்சு முடித்தவர்கள் அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mecl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mecl.gov.in/writereaddata/meclpdf/Detailed%20Advt%20no%20003%20Rectt%202018.pdf"

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...