Wednesday, July 4, 2018

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் | AAVIN DIRECT RECRUITMENT

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அங்கமான ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 275 "Senior Factory Assistant" பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Factory Assistant

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் பகுதிகளில் 152 இடங்களும், திருவண்ணாமலைக்கு 35 இடங்களும், நீலகிரிக்கு 35 இடங்களும், ஈரோட்டிற்கு 9 இடங்களும், சேலத்தில் 11 இடங்களும், தஞ்சாவூரில் 33 இடங்களும் உள்ளன.

வயதுவரம்பு: 01.01.2018 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdf

Tuesday, July 3, 2018

சண்டாளி - செம பாடல் வரிகள் | SANDALEE LYRICS IN TAMIL | SEMMA TAMIL MOVIE


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறிஞ்ச காசகி

கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.


கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி

ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.


பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி

தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.


தெரியலடி புரியலடி

உன் இருவிழி மனுஷனா இடுப்புல தூக்குதடி.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


முன்னால நீ வந்த இவன் முக்கா மொழம் பூவாகுறேன்

சொல்லாம நீ போன இவன் பல்லாங்குழி காயாகுறேன்.


அப்புறானே உன்னப் பாத்து

அம்மி வெச்சா த தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்.


மொத்தமா நீ என்ன சேர

நித்தம் நெனப்பு குள்ள கசங்கிப் புட்டேன்.


சொட்ட வாளா குட்டி நானும் சோறு திங்கல

நீ தொட்டுப் பேச ரெண்டு நாலா வீடு தாங்கல.



முத்தி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல

நீ எட்டிப் போவ செத்து போவென் காது குத்தல.


கத விடல கலங்கிடல

நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல.


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.


கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கார நீராகுறேன்

செந்தாமற கண்ணாலா நான் பொங்காமலே சூராகுறேன்.



நொடிங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடிச்சுப்புட்ட

உச்சி வான நின்ன ஆல ஒரே ஒதட்டசைப்புலே உலுக்கி புட்ட.


அல்லி ராணி என ஏந்தி ஆட்டி வைக்கிற

உன் அன்பில் என்ன சாவிக் கொத்தாா மாட்டி வைக்கிற.


புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற

நீ வெள்ளிகாச என்ன ஏனோ சேத்து வைக்கிற.



பழம்விடுற பழக்கிடுற

ஏ பகலையும் இரவையும் பாடையுலு பூட்டிடுற.



சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி

ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி

பாயாக் கெடக்குறேந் தரையில பீசாகி.


சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி

நா செவத்துல விட்டெறின்சா காசகி

கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

மத்திய தொழிலாளர் அமைப்பு நிறுவனத்தில் வேலை | CAREERS IN MINISTRY OF LABOUR & EMPLOYMENT

மத்திய தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் லேபர் பீரோ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பில் நிரப்பப்பட உள்ள 875 சூப்பரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 875

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Supervisor - 143
பணி: Investigator - 695
பணி: Stenographer - 19
பணி: Stenographer - 06
பணி: Assistant - 12

பணியிடங்கள்: சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பிஇ., புள்ளியியல், கணிதவியல், பொருளாதாரம், அப்ளைடு பொருளாதாரம், வணிக பொருளாதாரம், எக்னாமெட்ரிக்ஸ், புள்ளியியல், கணிதவியல், வணிகவியல், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள், பிளஸ் டூ தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெறவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 35க்குள்ளும், மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 முதல் 40க்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.lbchd.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய : http://www.lbchd.in/Advt_AFES_PMMY.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...