Thursday, May 31, 2018

சென்னை கடல் சார் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆராய்ச்சி அமைப்பான நேஷனல் சென்டர் பார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 157

பணி காலியிடங்கள் விவரம்:

பணி: Project Associate - 71
பணி: Project Scientist - 26
பணி: Research Assistant - 24
பணி: Multi Tasking Staff - 11
பணி: Technical Assistant I-07
பணி: Technical Engineer I -06
பணி: Administrative Associate - 06
பணி: Maintenance Engineer II
பணி: Multi Tasking Staff - 02
பணி: Driver cum Multi - Tasking Staff - 02
பணி: Finance Assistant - 02 
பணி: Finance Associate - 01
பணி: Procurement Assistant -01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எம்டிஎஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்ற பணியிடங்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ncscm.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:01.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://careers.ncscm.res.in:8082/ncscmPJobs/resources/doc/NCSCM-HR0418-Advertisement-18-05-2018.pdf

இந்திய கடற்படையில் பயிற்சியுடன் மாலுமி வேலை

இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இந்திய இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது "செய்லர் பிப்ரவரி-2019" என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையிலான மாலுமி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் டூ முடித்த இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: செய்லர் பிப்ரவரி-2019

வயது வரம்பு: 1.2.1998 மற்றும் 31.1.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதம், இயற்பியல் அடங்கிய அறிவியல் பிரிவில் பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 22 வார கால பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் அளிக்கப்படும். மாஸ்டர் சீப் பெட்டி ஆபீசர்-1  பணி வரை பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெற முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.06.2018

ஆன்லைன் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in

Wednesday, May 30, 2018

தேசிய உர நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உடனடி வேலை

உத்தரபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு தெலங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் செயல்பட்டு வரும் என்.எப்.எல் என அழைக்கப்படும் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமான தேசிய உர நிறுவனத்தின் பதிண்டா, பானிபட், விஜய்பூர், நங்கல் போன்ற கிளைகளில் காலியாக உள்ள 129 ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 129

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Junior Engineering Assistant - 127

தகுதி: பொறியியல் துறையில் Production, Mechanical, Electrical Instrumentation, Electrical&Electronics போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400

பணி: Fireman - 02

தகுதி:\ பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.235 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஓட்டப்பயிற்சி, எடை தூக்குதல், கயிறு ஏறுதல், பார்வைத்திறன் சோதனை போன்றவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல் தகுதி சோதிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nationalfertilizers.com இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு : http://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/AddNONEXECUTIVES.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...