Tuesday, May 29, 2018

மும்பை அணுசக்தி கனநீர் வாரியத்தில் வேலை

மும்பை அணுசக்தி கனநீர் வாரிய நிறுவனத்தில் காலியாக உள்ள 226 ஸ்டிபென்டரி டிரெயினி, டெக்னீசியன், சயின்டிபிக் ஆபீசர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 226

பணி: Stipendiary Trainee

1. Chemical - 35
2. Mechanical - 16
3. Electrical - 08
4. Chemistry (Laboratory) - 08 
5. Bioscience - 03


பணி: Stipendiary Trainee

6. Process/ Plant Operator - 60 
7. Electrical - 28
8. Mechanical (Fitter) - 34 
9. Turner - 04
10. Machinist - 05
11. Welder - 06
12. Draughtsman (Civil / Mechanical) - 02

பணி: Technician - C / D (Crane / Forklift Operator) - 02
பணி: Scientific Officer/D (Medical - General Medicine) - 02
பணி: Nurse/A - 05
பணி: Stenographer Grade-II - 02
பணி: Stenographer Grade-III - 02
பணி: Upper division clerk (UDC) - 07


தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கெமிஸ்ட்ரி, பயோசயின்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் ஸ்டிபென்டரி டிரெய்னி பணிக்கும், 12-ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் ஐடிஐ படித்தவர்களுக்கும், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள், மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஆராய்ச்சி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, உடல் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.hwb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.hwb.gov.in

தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை

தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 24க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடங்கள்: 805

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 757

பணி: Assistant Horticultural Officer (Code No.3104) - 48

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அல்லது தோட்டக்கலை மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் இயக்குநர் அல்லது காந்திகிராம் கிராம நிறுவனம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டு தோட்டக்கலை டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பில்லை.

சம்பளம்:  மாதம் ரூ.20,600 - 65,500

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்:  ரூ.100, பதிவுக் கட்டணம் ரூ.150.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.06.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:11.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tnpsc.gov.in/notifications/2018_10_AHO.pdf

Monday, May 28, 2018

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் | 300 கி.மீ. மைலேஜ்

 Honda _ Jazz


2020ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சனை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த கார் பேட்டரி முழு சார்ஜில் இருந்தால் சுமார் 300 கி.மீ. வரை ஓடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து பெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் எலெக்ட்ரிக் கார்களால் பல நன்மைகள் கிடைப்பதால் இன்று ஆட்டோமொபைல் துறையில் கால் பதித்துள்ள பெரும் நிறுவனங்கள் வரும் காலம் குறித்த பயம் வந்து விட்டது.
எலெட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது மிக சுலபமாக இருப்பதால் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரும் ஜாம்பவான்களாக விளங்குள் நிறுவனங்களில் வாகனங்களுக்கு போட்டியாக வாகனங்களை தயாரித்து சவால் விட துவங்கி விட்டனர்.

இதை சமாளிக்க ஹோண்டா நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன் படி திட்டம் அனைத்தும் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. வரும் 2020ம் ஆண்டு தனது முதல் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இத்திட்டத்தின் படி ஏற்கனவே மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க பெயரைபெற்றுள்ள ஜாஸ் காரில் எலெக்ட்ரிக் வேரியன்டை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் குறித்து தற்போது ஹோண்டா நிறுவனம் திட்டமிட்ட தொழிற்நுட்பத்தை இந்த காரில் பொருத்தும் பட்சத்தில் இந்த கார் முழு பேட்டரி சார்ஜில் சுமார் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக அந்நிறுவனம் சீனாவை சேர்ந்த கான்டெம்ரரி அம்பெரெக்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அந்நிறுவனம் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கான பேட்டரியை தயாரித்து வழங்கவிருக்கிறது.

மேலும் சீனாவிலேயே இந்த காரை தயாரித்து விற்பனை செய்தால் பேட்டரி தயாரிப்பிலும் சீன அரசு சலுகைகளை வழங்குகிறது. தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஜாஸ் காரின் மாடல்கள் எதுவும் மாற்றப்படுகிறதா அல்லது இதே மாடலில் எலெட்ரிக் பாகங்கள் பொருத்தப்படுகிறதா என்பது குறித்து தகவலை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது வந்துள்ள தகவலின் படி சீனாவில் இந்த காரை இந்திய மதிப்பின் படி ரூ16.34 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த கார் தயாரிப்பிற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது ஆண்டிற்கு 10,000 கார்களை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் எச்ஆர்-வி எஸ்யூவி கார்களை பிஜிங்கில் நடந்த ஒரு ஆட்டோ எகஸ்போவில் கண்காட்சிக்கு வைத்தது. இந்த கார் இந்தாண்டு விற்பனைக்கு வரும் என பேசப்படுகிறது. இந்த காரை சீனாவின் வென்சர் மார்க் என்ற நிறுனவத்துடன் ஒப்பந்தமிட்டு தயார் செய்துள்ளது.

தற்போது ஹோண்டா நிறுவனத்திடம் ஒரு, இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே உள்ளன. இந்த கார் முழுவதும் கலிபோர்னியாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த காரில் 25.5 கிலோ வாட்ஸ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 300 என்எம் டார்க் திறனை வழங்ககூடியது. முழு பேட்டரி சார்ஜில் 129 கி.மீ. வரை பயணம் செய்யலாம்.

இந்த காரை இந்தியாவில் விற்பனை செய்வது குறித்து அந்நிறுவனம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டாடா டிகோர் காரின் எலெக்ட்ரிக் வேரியன்டை வெளியிட அந்நிறுவனம் தயாராகி வருகிறது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...