Saturday, May 26, 2018

செளத் இந்தியன் வங்கியில் சட்ட, பாதுகாப்பு அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செளத் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள சட்டம் மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Probationary Legal Officers

காலியிடங்கள்: 09

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் எல்எல்பி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Probationary Security Officers

காலியிடங்கள்: 07

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42.020

தகுதி: பொறியியல் துறையில், இசிஇ, இஇஇ, இன்ஸ்ரூமென்டேசன், பையர் மற்றும் சேப்டி பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத்


விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.05.2018

Friday, May 25, 2018

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குரூப் 'பி', 'சி' வேலை

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் கீழ் ஆந்திரப் பிரதேச மாநிலம் மங்கலகிரியிலும், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 60 லேப் டெக்னீஷியன், எழுத்தர், காசாளர், ஸ்டோர் கீப்பர் போன்ற குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி: பெரும்பாலான பதவிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 18 முதல் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கும், ஓபிசி பிரிவினர் ரூ.1,000. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsraipur.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.aiimsraipur.edu.in/upload/vacancies/5afaccbdc29c0__Final%20Web%20Advt%20DR%20_Nagpur_.pdf 

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் மேலாண்மைப் பயிற்சியாளர் வேலை

விசாகப்பட்டினம் இரும்பு ஆலையின் (ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட்) மனிதவளத் துறை மற்றும் மார்க்கெட்டிங் துறையில் காலியாக உள்ள 14 மேலாண்மைப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: மேலாண்மைப் பயிற்சியாளர்

தகுதி:  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு:01.02.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100. விண்ணப்பக் கட்டணத்துக்கு 18 சதவீத ஜிஎஸ்டி உண்டு.


விண்ணப்பிக்கும் முறை: www.vizagsteel.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 25 முதல் ஜூலை 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2018 ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் யூ.ஜி.சி, நெட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவார்கள்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.vizagsteel.com/code/tenders/jobdocs/22097MT%20_HR%20%20Marketing_%20Advertisement%20Final.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...