Friday, May 25, 2018

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்:23

பணி: தோட்ட பராமரிப்பாளர் - 13

பணி:வாட்ச்மேன் - 10

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

சுற்றுலா ஆணையர், 
சுற்றுலா ஆணையரகம், 
தமிழ்நாடு சுற்றுலா வளாகம், 
எண்.2, வாலாஜா சாலை, 
சென்னை- 600002.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018


மேலும், விண்ணப்ப மாதிரி,விண்ணப்ப படிவம், வயதுவரம்பு சலுகை, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை பற்றி தெரிந்துக்கொள்ள :
www.tamilnadutourism.org  என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆர்.எ.சி நிறுவனத்தில் வேலை

டி.ஆர்.டி.ஓ என அழைக்கபடும் ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் - பி, பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூன் 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 41

பணி: சயின்டிஸ்ட் - பி

வயதுவரம்பு: 01.6.2018 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :rac.gov.in

Thursday, May 24, 2018

சருமத்தை பொலிவு பெற செய்ய வேண்டியவை


மஞ்சள் மற்றும் தயிர்:

தயிரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

தேங்காய் எண்ணெய்:

கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுதுவதற்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் சரும செல்களுக்கு சத்துகள் கிடைப்பதோடு, வறண்ட சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசி சுமார் ½ மணி நேரம் ஊறவிட்டு அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணங்களால் சரும பிரச்சனைகள் வருவது தடுக்கப்பட்டு, சருமம் பொலிவுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் சருமத்தின் அழகும் அதிகரிக்கும்

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...