Thursday, April 12, 2018

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: பண்ணை மேலாளர்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: பி.விஎஸ்சி தேர்ச்சி அடைந்த பிறகு 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்.வி.எஸ்.சி. முடித்திருக்க வேண்டும்.


பதவி: புராஜக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை/ கணக்கு/ அலுவலக நிர்வாகம்/ கொள்முதல் போன்றவற்றில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பதவி: புராஜக்ட் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி:
பி.டெக்(பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபார்மட்டீக்ஸ் உள்ளிட்ட படிப்புகள்) அல்லது உயிரி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: உயிரி அறிவியல்/ கணினி அறிவியல்/ தொழில்நுட்ப அறிவியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம்.

மேலும், வெப் டிசைன், டெக்னிக்கல் ரைட்டிங் துறைகளில் அனுபவம்.


நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18-04-2018 காலை 11 மணி.


முகவரி: 


The Project Director,
Translational Research Platform for Veterinary Biologicals(TRPVB), 
2nd Floor,CUL building,CAHS,
TANUVAS,Chennai - 600 05l. 


மேலும் விவரங்களுக்கு:

இந்திய அணு மின் கழகத்தில் வேலை

இந்திய அணு மின் கழகத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆஃபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ டி (ஸ்பெஷலிஸ்ட்ஸ்)

காலியிடங்கள்: 7

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.டி./ எம்.எஸ். முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: மெடிக்கல் ஆஃபிஸர்/ சி (ஜிடிஎம்ஓ)

காலியிடங்கள்: 9

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் எம்.பி.பி.எஸ். முடித்திருக்க வேண்டும். மேலும், பிஜி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: மும்பை

விண்ணப்பிக்கும் முறைwww.npcil.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/advt_07mar2018_01.pdf

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19-04-2018



மாம்பழச் சாகுபடி: புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

மா பயிர் பாதுகாப்பு:

பூப்பிடிக்கும் பருவத்தில் எண்ணைய்ப் பசை போன்று பளபளப்பாக இருந்தால் பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என அறிந்து கொள்ளலாம். இதை நாம் உற்று நோக்கினால் கண்டுபிடித்துவிடலாம். இப்பூச்சிகள் மாவிலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துகளில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழப்பதோடு பூ மொட்டுகள் மற்றும் பிஞ்சுகள் ஆகியவை உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் கவாத்து செய்து அதை அகற்றி மாமரத்தை பாதுகாக்க வேண்டும்.

பாதிப்பைக் கட்டுப்படுத்த:

இந்த நோயைக் கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி 1.5 மில்லி மருந்தை, ஒரு ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படத் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதேபோல், கார்பரில் 50 சதவீதம் நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். அதேபோல், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகம் இருக்கும். இதை கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

தண்டு துளைப்பான் தாக்குதல்: இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் 1 மீட்டர் உயரத்தில் மரப்பட்டையை வடிவில் செதுக்கி, இடையில் பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் தெளித்து, பின்பு பட்டையை மரத்தோடு பொருத்துவதோடு ஈரக்களிமண்ணால் மூட வேண்டும்.

அதேபோல், இலைப்புள்ளி தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பென்டாசிம் 1 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் அல்லது க்ளோராதலேனில் 2 கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து பிஞ்சுப் பருவத்திலிருந்து அறுவடை செய்வதற்கு முன்பு வரையில் 20 நாள்களுக்கு ஒருமுறை தெளித்து வந்தால் அனைத்து மா வகைகளையும் பாதுகாக்கலாம்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...