Tuesday, April 10, 2018

பி.காம் பட்டதாரிகளுக்கு தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் வேலை

தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர் மற்றும் உதவியாளர் போன்ற 84 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 84

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Accounts Officer - 19
System Operator - 33
Assistant - 12
Accountant - 20

தகுதி:

பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

www.nsic.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் "The National Small Industries Corporation Limited" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி


General Manager,
Human Resources the National Small Industries Corporation,
NSIC Bhawan,Okhla Industrial Estate ,New Delhi-110020.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர
கடைசி தேதி28.04.2018மேலும் விவரங்களுக்கு: http://www.nsic.co.in/pdfs/careers/201846183632_Detailed%20Advertisement%20and%20Guidelines%20for%20AO.pdf

மாவட்ட வாரியாக தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள்

கடலூர் - தென்பெண்ணை, கெடிலம்
விழுப்புரம் - கோமுகி
காஞ்சிபுரம் - அடையாறு, செய்யாறு, பாலாறு
திருவண்ணாமலை - தென்பெண்ணை, செய்யாறு
திருவள்ளூர் - கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு
கரூர் - அமராவதி
திருச்சி - காவிரி, கொள்ளிடம்
பெரம்பலூர் - கொள்ளிடம்
தஞ்சாவூர் - வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி
சிவகங்கை - வைகையாறு
திருவாரூர் - பாமணியாறு, குடமுருட்டி
நாகப்பட்டிணம் - வெண்ணாறு, காவிரி
தூத்துக்குடி - ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி
தேனி - வைகையாறு
கோயம்புத்தூர் - சிறுவாணி, அமராவதி
திருநெல்வேலி - தாமிரபரணி
மதுரை - பெரியாறு, வைகையாறு
திண்டுக்கல் - பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி
கன்னியாகுமரி - கோதையாறு, பறளியாறு, பழையாறு
இராமநாதபுரம் - குண்டாறு, வைகை
தருமபுரி - தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி
சேலம் - வசிட்டா நதி , காவிரி
விருதுநகர் - கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு
நாமக்கல் - உப்பாறு, நெய்யல், காவிரி
ஈரோடு - பவானி, காவிரி

Monday, April 9, 2018

காற்றிலிருந்து நீர் எடுக்கும், 'யாழ்'

வறண்ட பாலை நிலங்களில், காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை நீராக்கும் சில தொழில்நுட்பங்கள், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நுண்ணிய கம்பி வலையை, ஒரு சட்டத்தில் மாட்டி, காற்றில் வைத்து விடுவதும் அதில் ஒன்று. 
காற்று அந்த வலையின் வழியே செல்லும் காற்றின் ஈரப்பதம், நெருக்கமான கம்பிகளில் சிறுகச் சிறுக சேர்ந்து, நீர் திவலைகளாக மாறும். நீர் திவலை பெரிதாகும்போது, புவியீர்ப்பு விசை கீழ் நோக்கி இழுக்க, திவலைகள் திரண்டு உருண்டு, கீழே உள்ள நீர்க்கலனில் சேகரிக்கப்படும்.
இந்த எளிய தொழில்நுட்பத்தில் ஒரு சிறு மாற்றத்தை செய்தால், இன்னும் சிறப்பாக நீரை சேகரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர், அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப நிலையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்.
கலிபோர்னிய கடற்கரை பகுதியில், காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் செகோயா மரங்களைப் பார்த்து, இக்கண்டு பிடிப்பை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
கம்பி வலையில் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் கம்பிகளில், குறுக்காக செல்லும் கம்பி களை நீக்கி, நெடுக்காக இருக்கும் கம்பிகளை, மேலும் நெருக்கமாக வைத்த போது, நீர் வேகமாக கீழே ஓடி சேகரமானது. 
இந்த புதிய முறை, 'யாழ்' எனப்படும் பண்டைய இசைக் கருவியைப் போல இருக்கிறது.
ஆய்வகத்தில், யாழ் கம்பி சட்டத்தை வைத்து சோதித்ததில், நீர் கூடுதலாக, விரைவாக காற்றிலிருந்து சேகரிக்க முடிந்த தாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
விரைவில் பாலை நிலப் பகுதிகளில், இந்த தொழில்நுட்பத்தை சோதிக்க இருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...