Thursday, March 22, 2018

மத்திய கணினி நிறுவனத்தில் இன்ஜினியரிங் வேலை


மத்திய கணினி நிறுவனத்தில் இன்ஜினியரிங் வேலை: விண்ணப்பக் கட்டணம் இலவசம்.

சென்ட்ரல் டெவலப்மெண்ட் அட்வான்ஸ்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய கணினி அறிவியல் முன்னேற்ற நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற உடனே விண்ணப்பிக்கவும் .

பணி விவரங்கள்:

சிடிஏசி பணியிடம் ஹைதராபாத் ஆகும்.

காலிப்பணியிடங்கள்:

புராஜக்ட் ஆபிசர் -1 பணியிடம்

புராஜக்ட் இன்ஜினியர் மல்டி மீடியா -2 பணியிடங்கள் 

புராஜக்ட் இன்ஜியர் ஐஎஸ்இஏ -2 பணியிடங்கள்

புராஜக்ட் இன்ஜினியர் சார்க் -4 பணியிடங்கள்

புராஜக்ட் அசோசியேட்ஸ் இ- சார்க் -2 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

புராஜக்ட் ஆபிசர் பணிக்கு எம்பிஏ மார்கெட்டிங் அல்லது அங்கிகரிக்கப்பட்ட கல்லூரி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

மற்ற பணிகளுக்கு இன்ஜினியரிங்/ எம்சிஏ/ பிடெக் டிகிரி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .

1 மற்றும் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிவாய்ப்பு பெறலாம். மாதம் ரூபாய் 31, 000 சம்பளம் கொடுக்கப்படும்.

எழுத்து மற்றும் நேரடி தேர்வின் மூலம் தகுதியானர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:

Human Resource Department Centre for Development of Advanced Computing, 
Plot No. 6 & 7, Hardware Park, Sy No. 1/1, Srisailam Highway, 
Pahadi Shareef Via Keshavagiri (Post) ,
Hyderabad -500 005


மேலும் விவரங்களுக்கு : https://www.nlcindia.com/new_website/index.htm

இஞ்சி சூள் தஞ்சை

இஞ்சி சூள் தஞ்சை :

நாம் இக்காலத்தில் பயன்படுத்துகிற தமிழுக்கும், சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நமக்கு நன்கு தெரிந்த பெயர்களில் ஒன்று இஞ்சி. சமையலுக்கும்,மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.

ஆனால், அந்த காலத்தில் இஞ்சி என்றால் கோட்டையின் மதில் சுவரை குறிக்கும். “ இஞ்சி சூள் தஞ்சை “ என்று தேவாரத்தில் ஒரு வரி வருகிறது. கோட்டை மதில் சுவர்களால் சூழப்பட்ட தஞ்சாவூர் என்பது இதற்கான பொருள். மதுரை மாவட்டத்தில் வட பழஞ்சி, தென் பழஞ்சி என்ற ஊர்கள் உள்ளன். மன்னராட்சிக் காலத்தில் பெரிய கோட்டை மதில் சுவர்கள் இருந்திருக்கலாம்.

Wednesday, March 21, 2018

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான இடம்

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியாவுக்கான இடம்:

நோபல் பரிசு குறித்த அறிவுப்புகள் வெளியாகும்போதெல்லாம் இந்தியா குறித்த ஆதங்கம் நம் மனதில் ஏற்படும். அறிவியல் ஆய்வுகள் சார்ந்த நோபல் பரிசை ஒரு இந்தியர் பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. ஆராய்ச்சிகளுக்கு நாம் முக்கியத்துவம் தராததே இதற்குக் காரணம். உலக நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகளைக் குறித்து ‘நேச்சர்’ இன்டெக்ஸ் நிறுவனம் கடந்த 1.1.2015 முதல் 31.12.2015 வரை செய்த ஆய்வு முடிவுகளை 2016ம் ஆண்டு வெளியீடாக அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆய்வின் முடிவினைக் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என 2 பிரிவுகளிலும், வேதியியல், புவி மற்றும் சுற்றுச்சூழல், வாழ்வு அறிவியல்கள், இயற்பியல் அறிவியல்கள் என 4 பாடப் பிரிவுகளிலும், இயற்கை மற்றும் அறிவியல் எனும் ஆய்விதழ் குழு உட்பட 5 தலைப்புகளின் கீழ் பிரித்து, ஒன்றிணைத்து அட்டவணைப்படுத்தி வெளியிட்டிருக்கிறது. 

உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள், நாடுகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வேதியியல் நிறுவனங்கள், புவி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள், வாழ்வு அறிவியல் நிறுவனங்கள், இயற்பிய அறிவியல் நிறுவனங்கள் என்ற தனிப்பிரிவுகளிலும் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில், சிறந்த நிறுவனங்கள் பிரிவில் 500 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் இந்தியாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கழகம் 51, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்குழு (Council of Scientific and Industrial Research (CSIR)) 80, இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science (IISc)) 137, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் (Indian Institute of Science Education and Research (IISER)) 159, டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம் (Tata Institute of Fundamental Research -TIFR) 268, இந்திய வேளாண்மை அறிவியல் கழகம் (Indian Association for the Cultivation of Science -IACS) 295, ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு நிறுவனம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research -JNCASR) 397, ஐதராபாத் பல்கலைக்கழகம் (University of Hyderabad -UoH) 472 எனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில், சிறந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட 50 நாடுகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா 13வது இடத்தில் உள்ளது. உலகளவில் அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் மொத்தம் 500 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவின் இந்திய அறிவியல் நிறுவனம் 118, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் 137, ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு நிறுவனம் 330, ஐதராபாத் பல்கலைக்கழகம் 390 எனப் பல்வேறு இடங்களைப் பிடித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. எனினும் இந்திய நிறுவனம் ஒன்றுகூட இடம்பெறவில்லை. அறிவியல் ஆராய்ச்சிகளில் சிறந்த வேதியியல் நிறுவனங்களில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்குழு 27, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் 30, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் 63 என இடங்களைப் பெற்றுள்ளன. 

சிறந்த இயற்பியல் நிறுவனங்களின் பட்டியலில் 100 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் 46வது இடத்தில் உள்ளன. புவி மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனங்கள் மற்றும் சிறந்த வாழ்வு அறிவியல் நிறுவனங்கள் பட்டியலில் உலக அளவில் 100 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய நிறுவனங்கள் ஏதுமில்லை. இந்தப் பட்டியலைப் பன்னாட்டு அளவிலும் ஆப்ரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா, மேற்கு ஆசியா மண்டலப் பகுதிகள் வழியாகவும், நாடுகளின் பெயர்கள் வழியாகவும், தனிப்பிரிவுகள் வழியாகவும் தனித்தனியே அட்டவணைப்படுத்தி உள்ளனர். 2016ம் ஆண்டுக்கான முழுமையான பட்டியலையும், கடந்த 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பட்டியலையும் முழுமையாகப் பார்க்க https://www.natureindex.com/ இணைய முகவரிக்குச் செல்லலாம். இதில் ஆய்வு மாணவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு தலைப்புகளிலான ஆய்வுக்கட்டுரைகளும் உள்ளன.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...