Thursday, June 21, 2018

முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி | தமிழ் மணி

முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி | தமிழ் மணி

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. 

இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 

அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.

இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. 

மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. 

இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. 

மேலும் மஓரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.

இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள "ரே பாபா" தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் 10 நாட்களில்.... | Group-4 Results Within 10 Days


குரூப் 4 தேர்வு முடிவுகளை 10 நாள்களில் வெளியிட டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வும், குரூப் 4 தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து கடந்த பிப்ரவரி 11-இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 

இந்தத் தேர்வுக்கான அறிவிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 14-இல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 9,351 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வினை சுமார் 10 லட்சம் பேர் எழுதினர்.

 இந்தத் தேர்வுக்கான முடிவுகள் வரும் 10 நாள்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, June 20, 2018

விமான நிறுவனத்தில் வேலை | AIRPORTS AUTHORITY OF INDIA RECRUITMENT

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 186 இளநிலை மற்றும் முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 15-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:  186

பணி:  Junior Assistant (Fire Service) - 147

சம்பளம்: மாதம் ரூ.12,500 -28,500

பணி: Senior Assistant (Electronics) - 39

சம்பளம்: மாதம் ரூ. 14,500 - 33,500

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு துறைகளில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை, உடற்தகுதி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி, மற்றும் பெண்களுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய:https://www.aai.aero/sites/default/files/examdashboard_pressnote/JrAsst%28FS%29%26SrAsst.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...