Saturday, July 14, 2018

தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை | Corrigendum Pharmacist ISM | MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB)

தமிழ்நாடு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பார்மசிஸ்ட் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Pharmacist (Siddha) - 148

பணி: Pharmacist (Ayurveda) - 38

பணி: Pharmacist (Homoeopathy) - 23

பணி: Pharmacist (Unani) - 20

சம்பளம்:  மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி உள்ளிட்ட துறைககளில் மருந்தியல் துறையில் டிப்ளமோ பார்மசி முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 57-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய :http://www.mrb.tn.gov.in/pdf/2018/Corrigendum_Pharmacist_ISM_10072018.pdf

Friday, July 13, 2018

சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை | NCC CHENNAI RECRUITMENT

சென்னையில் உள்ள என்சிசி அலுவலகத்தில் காலியாக உள்ள ஸ்டோர் அட்டெண்ட், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலியிடம்: 05

பணி: Driver - 01

சம்பளம்: ரூ.19,500 - 62,000

பணி: Store Attendant - 01

சம்பளம்: ரூ.15,900 - 50,400

பணி: Office Assistant - 02

சம்பளம்: ரூ.15,700 - 50,000

பணி: Boat Lascar - 01

சம்பளம்: மாதம் ரூ.15,900 - 50,400

தகுதி:  எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். போட் லஸ்கர் பணிக்கு நீச்சல் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

Commander,
NCC Group Headquarters, 
Madras "B",
Chennai.


பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 10.09.2018.


விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய : https://drive.google.com/open?id=1PzzUofyyPqrJJTYemE4hU8Ze6l0vf6Lr

Thursday, July 12, 2018

உதவி காவல் ஆய்வாளர் பணியிடத் தேர்வு | RECRUITMENT FOR THE POST OF SUB - INSPECTOR OF POLICE(TECHNICAL) - 2018 | LAST DATE AUGUST 10





தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 காவல் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுக்கு ஆகஸ்ட் 10 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழக காவல் துறையில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள 309 காவல் உதவி ஆய்வாளர் (சார்பு ஆய்வாளர்) பணியிடத்துக்கு விரைவில் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணைய தளம் www.tnusrbonline.org வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால், 044-4001 6200, 044 - 2841 3658, 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு பேசலாம். இந்த உதவி மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை செயல்படும். அதேபோல் அனைத்து மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலங்களும் உதவி மையம் செயல்படுத்தப்படும்.

இந்த தேர்வு இருகட்டமாக நடத்தப்படும். முதலில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண்களும், நேர்காணல் தேர்வுக்கு 10 மதிப்பெண்களும் வழங்கப்படும். கூடுதல் கல்வித் தகுதிக்கும், சிறப்பு மதிப்பெண்ணுக்கும் தலா 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும். இத்தேர்வில் காவல் துறையினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...