Thursday, June 28, 2018

ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்புகள் | TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT VACANCIES

தமிழக ஊரக வளர்ச்சி துறையின் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Subject Matter Specialist (Animal Science) - 01
பணி: Subject Matter Specialist (Agricultural Engineering) - 01
பணி: Programme Assistant (Lab Technician) - 01
பணி: Programme Assistant (Farm Manager) - 01
பணி: Programme Assistant (Computer) - 01
பணி: Assistant (Office - 01
பணி: Stenographer(Gr-III) - 01
பணி: Driver (Jeep) - 01

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம், பிளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் சமம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழில் எழுத்த, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை "TAMILNADU BOARD OF RURAL DEVELOPMENT, CHENNAI" என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.kvkthiruvannamalai.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்கள் மற்றும் சுயமுகவரி எழுத்தப்பட்ட ரூ.5 மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட தபால் கவர் ஆகியவற்றை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The President, 
Tamil Nadu Board of Rural Development,
Post Box No.8811, T.Nagar, Chennai - 600 017.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.kvkthiruvannamalai.com/Staff%20recruitment%20in%20KVKs-NOTIFICATION%20No.%2001-2018-TNBRD.pdf

தமிழ்நாடு பெண்கள் நலக்கழகத்தில் வேலை | TNCDW - Call for Consultants

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் நலக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Consultant-Marketing(SGH Products) - 01

தகுதி: எம்பிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Consultant-Agribusiness Management - 01

தகுதி: விவசாய பொருளாதாரம், விவசாய விற்பனை மேலாண்மை, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Consultant-Dairy Business Management - 01

தகுதி: Veterinary, Diary Management, Diary Development, Economics, Rural Development துறைகளில் இளங்கலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.75,000

வயதுவரம்பு: உச்ச வயதுவரம்பு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய விவரங்களை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Managing Director, 
Tamilnadu Corporation for Development of Women Limited, 
Mother Teresa Women's Complex- I Floor,
Valluvar Kottam High Road, 
Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu, India.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tamilnadumahalir.org/images/pdf/Call%20for-Consultants.pdf

Wednesday, June 27, 2018

ஆசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு | Teachers Recruitment Board Certificate of Marks | TRB Certificate of Marks

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், 2017, ஏப்ரல் 30 -ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 5 லட்சத்து 12,260 பேர் எழுதினர்.

இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 

தங்களின் மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஆர்பி தெரிவித்துள்ளது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...