Saturday, June 23, 2018

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் | Correction In Tamil Letters

வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் என்னும் கட்டுரை கொஸ்தான்சோ ஜுசேப்பே பெஸ்கி (1680-1747) என்னும் இயற்பெயரும் வீரமாமுனிவர் என்னும் சிறப்புப் பெயரும் கொண்ட தமிழறிஞர் ஒருசில தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தி அமைத்த வரலாற்றை எடுத்துரைக்கிறது. 

வீரமாமுனிவர் தமிழகத்தில் 1710-இலிருந்து 1747 வரை மறைப்பணியும் தமிழ்ப்பணியும் ஆற்றினார். 

தலைசிறந்த தமிழறிஞரான அவர் இலக்கணம், இலக்கியம், அகராதி, சிறுகதை போன்ற பல துறைகளில் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தார். 

தமிழுக்கு அவர் ஆற்றிய ஒரு சீரிய பணி தமிழ் எழுத்துக்களில் அவர் கொணர்ந்த சீர்திருத்தம் ஆகும்.

உயிரெழுத்துச் சீர்திருத்தம்:


1) அகரத்தையும் ஆகாரத்தையும் வேறுபடுத்தல்:

வீரமாமுனிவர் காலத்தில் ஆகாரத்தை எழுதும் பொழுது அகரத்தின் மேல் புள்ளியிட்டு எழுதியதை விடுத்து அகரத்திற்கு சுழியிட்டு ஆகாரத்தை எழுதினார்.

                                                                அ் => ஆ 



2) எகரத்தையும் ஏகாரத்தையும் வேறுபடுத்தல்:

முனிவர் காலத்திற்கு முன்னால் "எ" என்னும் எழுத்து குறிலாகவும் நெடிலாகவும் ஒலிப்புப் பெற்றது. 

அவர் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காண்பிக்க எகரத்தில் வருகின்ற மேல் கோடு நீட்டிச் சுழித்தால் அதை நெடிலாக ஒலிக்கலாம் என்று சீர்திருத்தம் கொணர்ந்தார்.

ஆனால் அச்சீர்திருத்தம் தற்போது வழக்கத்தில் இல்லை. 

அவர் இயற்றிய தமிழ்-இலத்தீன் அகராதி (1744) முழுவதிலும் "ஏ" என்னும் எழுத்தை "எு" என்றே எழுதியுள்ளார். 

இப்போது ஏகாரத்தில் இடப்படுகின்ற கீழ் வளைகோட்டைக் கொண்டுவந்தது யார் என்று தெரியவில்லை.

எ் => எு 



3) ஒகரத்தையும் ஓகாராத்தையும் வேறுபடுத்தல்:


இங்கேயும் குறிலையும் நெடிலையும் வேறுபடுத்த வீரமாமுனிவர் ஒகரத்தின் கீழே சுழி சேர்த்து அதை நெடிலாக்கினார்.

                                                                 ஒ் => ஓ 



உயிர்மெய்யெழுத்துச் சீர்திருத்தம்:


1) எகர ஏகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

தேன் என்பதைத் தென் என்பதிலிருந்து வேறுபடுத்த எகர ஒலி ஏகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட வீரமாமுனிவர் எகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஏகார ஒலி பெறச் செய்தார்.

                                                           தெ்ன் => தேன். 


2) ஒகர ஓகார உயிர்மெய் வேறுபடுத்தல்:

கோல் என்னும் சொல்லைக் கொல் என்னும் சொல்லிலிருந்து வேறுபடுத்த ஒகர ஒலி ஓகார ஒலியாக வேண்டும். இவ்வேறுபாட்டைக் காட்ட முனிவர் ஒகர ஒலியைச் சுட்டுகின்ற கொம்புக்கு மேலே சுழி அமைத்து, ஓகார ஒலி பெறச் செய்தார்.

                                                          தெ்ால் => தோல் 


3) உயிர்மெய்யெழுத்தில் ஆகாரத்தையும் ஓகாரத்தையும் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தல்:


மான் என்னும் சொல்லிலும் கோன் என்னும் சொல்லிலும் ஆகாரமும் ஓகாரமும் வருகின்றன. 

அவற்றைக் குறிக்க பயன்படும் கால் ரகரம் போல் இருந்தாலும் அது கீழே வளைவு பெறுவதில்லை. 

இவ்வாறு வளைவு கொடுத்து நெடிலைச் சுட்டும் காலை ரகரத்திலிருந்து வேறுபடுத்தும் முறை வீரமாமுனிவர் கொணர்ந்த சீர்திருத்தம் அல்ல. 

அவர் காலத்திலேயே சிலர் கிரந்த ரகரம் போன்ற இம்முறையைக் கையாண்டனர் என்றும், தாமும் அவ்வாறு எழுதியதாகவும் முனிவர் கூறுகிறார். 

அதையே அவரும் பயன்படுத்தி வழக்கத்தில் கொண்டுவந்தார்.

இந்த ரகரம் சீர்திருத்தம் மலையாளத்தில் உள்ள ரகரம் "ര" போல இருந்தது.


பயன்:

உயிரெழுத்திலும் உயிர்மெய்யெழுத்திலும் வீரமாமுனிவர் கொணர்ந்த எகர ஒகர சீர்திருத்தத்தை ஆட்சியாளரும், அச்சகத்தாரும், அச்சடித்தோரும் ஏற்று நடைமுறைக்குக் கொண்டு வந்ததால் அச்சீர்திருத்தம் இன்றும் நிலைபெற்று, அனைவரும் மேற்கொள்ளும் வழக்கமாக வந்துவிட்டது.

தாம் செய்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வீரமாமுனிவரே தமது தமிழ்-இலத்தீன் அகராதியின் (1744) முன்னுரையில் 15ஆம் பத்தியில் விளக்கியுள்ளார்.

வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்திருத்தத்தின் சிறப்பை 
ச. இராசமாணிக்கம் கீழ்வருமாறு விவரிக்கிறார்:


“ தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ் எழுத்துக்களை எவராலும் மாற்ற முடியவில்லை...வெளிநாட்டில் பிறந்து, ஏலாக்குறிச்சி என்ற சிற்றூரில் பாமர மக்களிடையே பணிபுரிந்த வீரமாமுனிவர், இத்தகைய சீர்திருத்தத்தைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது, செயற்கரிய செயலாகும்...வேறொன்றும் செய்யாமல், இஃது ஒன்றை மட்டும் செய்திருந்தாலே, அவருக்குத் தமிழில் சிறந்த இடம் கிடைத்திருக்கும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பி.இ, எம்.பி.ஏ முடித்தவர்களுக்கு வேலை | EMPLOYMENT NOTIFICATION IN CHENNAI METRO RAIL LIMITED

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் (சிஸ்டம்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ்) பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து ஜூலை 19-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பணி: Director (Systems & Operations)

காலியிடங்கள்: 01

வயது வரம்பு:  58-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

Basic Pay - ரூ.75,000

IDA (Currently 127.2% of Basic Pay) - ரூ.95,400

HRA (30% of Basic Pay) - Rs. 22,500

Cafeteria Allowance (35% Basic Pay) - ரூ.26,250

Gross Pay - ரூ.2,19,150

தகுதி: பொறியியல் துறையில் எலக்டிரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவில் பி.இ முடித்திருக்க வேண்டும். மேலும் எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2018

விண்ணப்பிக்கும் முறை: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

General Manager (HR),
Chennai Metro Rail Limited, Admin Building, 
CMRL Depot, Poonamallee High Road, 
Koyambedu, Chennai- 600107


மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/06/CMRL-HR-06-2018.pdf

வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை | VACANCIES TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT

தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்பட்டு வரும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்:  09

பணி: Senior Scientist & Head - 01 

சம்பளம்: மாதம் ரூ.37,400-67000.

பணி: Programme Assistant (Lab Technician) - 01

பணி: Programme Assistant (Farm Manager) - 01

பணி: Programme Assistant (Computer) - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300-34800.

பணி: SMS (Animal Science) - 01

பணி: SMS (Agricultural Engineering) - 01

சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Assistant (Office) - 01

சம்பளம்: மாதம் ரூ.15600-39100.

பணி: Stenographer (Grade-III) - 01

சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

பணி: Driver (Jeep) - 01

சம்பளம்: மாதம் ரூ.5200-20200.

தகுதி: ஐ.டி.ஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 45-க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDF என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

THE PRESIDENT, 
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, 
Post Box No. 8811, T. Nagar, Chennai - 600 017, 
Tamil Nadu.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://krishnagirikvk.org/REUP/NOTIFICATIONNo.01-2018-TNBRD.PDF

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...