Saturday, June 23, 2018

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை | Opportunities In Reserve Bank of India (RBI)

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூலை 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : மருத்துவ ஆலோசகர் (Medical Consultant (MC))

காலியிடங்கள் : 02

தகுதி: அல்லோபதி துறையில் எம்.பி.பி.எஸ் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:  ஒரு மணி நேரத்திற்கு ரூ.850

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/EMC18062018_AN3.pdf லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Reserve Bank of India,
Main Office Building Dispensary,
6, Sansad Marg,
New Delhi - 110 001

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 17.07.2018

மேலும் விண்ணப்பம் குறித்து முழுமையான விபரங்களுக்கு : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3498

Friday, June 22, 2018

ஜூலை 3 -இல் வேளாண் உதவி பொறியாளர் நேர்காணல்

வேளாண் துறை உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 3 -ஆம் தேதி (ஜூலை 3) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 

இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-


தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் பணிக்கான உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 7 -இல் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் 3,241 பேர் பங்கேற்றனர்.

போட்டியாளர்கள்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அந்தப் பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 46 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கான நேர்காணல் தேர்வு ஜூலை 3 -ஆம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று சுதன் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு 8 மாவட்டங்களில் ரத்து

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை நடத்தக் கோரி, திருவண்ணாமலையில் இடைநிலை ஆசிரியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்தது.

கலந்தாய்வின் இறுதி நாளான வியாழக்கிழமை இடைநிலை ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டம் விட்டு வருவாய் மாவட்டம் மாறும் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெற இருந்தது. இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்ள 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர் - ஆசிரியைகள் விண்ணப்பித்திருந்தனர்.

கலந்தாய்வு நிறுத்தம்: இந்த நிலையில், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி உள்பட 8 மாவட்ட அரசுப் பள்ளிகளில் அதிகப்படியான காலிப் பணியிடங்கள் இருப்பதால், வியாழக்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வை புதன்கிழமை இரவு தொடக்கக் கல்வி இயக்ககம் ரத்து செய்தது. இதனால், 8 மாவட்டங்களிலும் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.

கலந்தாய்வில் கலந்து கொள்ள வியாழக்கிழமை காலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த ஆசிரிய - ஆசிரியைகள் கலந்தாய்வு ரத்து செய்யப்பட்ட தகவலறிந்து அதிர்ச்சியடைந்தனர்

இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் இயங்கும் தியாகி நா.அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அலுவலகம் எதிரே தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அப்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வை உடனே நடத்தக் கோரி முழக்கம் எழுப்பினர். பின்னர், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமாரிடம் அளித்தனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...