Saturday, June 2, 2018

இன்ஜினியரிங் கலந்தாய்வு ....விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலைக்கழகம் இன்ஜினியரிங் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்துகிறது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது.

இன்று வரை நீட்டிப்பு :

ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது.

ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்:

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று மாலை வரை இணையதளம் மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,000க்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.

அசல் சான்றிதழ்கள்:

இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள, இணைய சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

ரேங்க் லிஸ்ட்:

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண் வெளியிடப்படும். மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களின் விருப்பகல்லூரி பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பிரத்யேக இணையதளம்:

அதைத்தொடர்ந்து ஜூலை 30ம் தேதிக்குள், 6 கட்டங்களாக இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் tnea.ac.in வெளியிடப்படும்.

இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக்குவது எப்படி?

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் :

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா:

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

நெல்லிக்காய்:

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

வெந்தயம்:

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.

நெய்:

நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.

மிளகு:

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.

ப்ளாக் டீ:

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

தொடு வானம் – அநேகன்

தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்
தொடு வானம் தொடுகின்ற நேரம் தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர்க் கரைகிறேன்
வான் நீலத்தில் எனைப் புதைக்கிறேன்

இதயத்திலே தீப்பிடித்து கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே 
கண்ணே காண்பேனோ
இலை மேலே பனித்துளிப் போல் 
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம் 
பொன்னே பூந்தேனே

காதல் என்னைப் பிழிகிறதே 
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை 
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழைத்துளிப் போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத்தேடும் வேரினைப்போல 
பெண்ணே உன்னைக் கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போது 
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது 
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிரிந்ததற்கே 
பல பொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ...........................

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...