Wednesday, May 30, 2018

ரயில்வேயில் டிராக்மேன், கலாசி வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரயில்வே. கொங்கன் ரயில்வே கார்பரேசன் மூலமாக இது கட்டமைக்கப்பட்டு, இந்தியா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்குக் கடற்கரை வழியாக கர்நாடகாவில் உள்ள மங்களூரில் இருந்து கோவா வழியாக மஹாராஷ்டிராவில் உள்ள மும்பை வரையிலான தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இது மற்ற ரயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை.

தற்போது இந்த கொங்கன் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 100 டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 100

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Track man - 50
பணி: A pman -07
பணி: Khalasi Electrical - 02
பணி: Khalasi S &T - 08
பணி: Khalasi Mechanical - 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 18 முதல் 31க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைன் மற்றும் வங்கி அட்டைகள் மூலமும் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://www.konkanrailway.com/uploads/vacancy/1527051865Notification_5-2018.pdf

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை

மும்பையில் செயல்பட்டு வரும் விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் காலியாக உள்ள 36 ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Scientific Assistant-B (Civil) - 3
பணி: Scientific Assistant-B (Electrical) - 2
பணி: Scientific Assistant-B (Mechanical) - 2
பணி: Scientific Assistant-B (Information Technology / Computer Science) - 2
பணி: Technician-B (Plumbing) - 3
பணி: Technician-B (Carpentry) - 3
பணி: Technician-B (Electrical) - 5
பணி: Technician-B (Computer Operator and Programming Assistant) - 1
பணி: Technician-B (Information & Communication Technology System Maintenance ) - 1
பணி: Technician-B (Draughtsman-Civil) - 1
பணி: Assistant Security Officer-A - 5
பணி: Upper Division Clerk - 6
பணி: Driver (Ordinary Grade) - 2

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் மற்றும் இதர அறிவியல் கலை துறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் ஓட்டுநர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 04.06.2018 தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும்  முறை:  www.dcsem.gov.in அல்லது                                              https://dcsem.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Scientific Assistant - B, Assistant Security Officer-A போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மற்றும் Technician - B, Upper Division Clerk , Driver (Ordinary Grade) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :   http://dcsem.gov.in/resources/uploads/advertisements/advt012018_10534426531525436464.pdf"

ஐஐடி கல்வி மையத்தில் வேலை

புவனேஸ்வரில் செயல்படும் ஐஐடி கல்வி மையத்தில் காலியாக உள்ள 42 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42
1. Registrar
2. Superintending Engineer (Civil)
3. Assistant Registrar
4. Assistant Librarian
5. Assistant Executive Engineer (Civil)
6. Network Administrator
7. Public Relation Officer
8. Student Counselor
9. Medical Officer (Resident)
10. Sr. Library Information Assistant
11. Junior Superintendent
12. Junior Accounts Officer
13. Horticulturist
14. Junior Hindi Translator
15. Junior Technical Superintendent
16. Technician (System Administration)
17. Technician (Network Administration)
18. Junior Technician
19. Junior Laboratory Assistant
20. Pharmacist
21. Junior Assistant
22. Driver

வயதுவரம்பு: 30 முதல் 57-க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கான வயதுவரம்பை இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தகுதி:  இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்.சி., எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitbbs.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Registrar (Estt.)
Indian Institute of Technology Bhubaneswar,
ToshaliBhawan, Satyanagar,
Bhubaneswar – 751007, Odisha,
Tel. No. 0674 - 257 6187/6186

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.06.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: 

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...