Friday, May 25, 2018

கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள குரூப்-ஏ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரிகள் தரத்திலான உதவி கமாண்டன்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி பைலட், கமர்சியல் பைலட் போன்ற பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடியுரிமை பெற்ற மணமாகாத இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ் டூ படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.


பிளஸ் டூ படிப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி (ஆண் - பெண்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஜெனரல் டியூட்டி பைலட், மற்றும் கமர்சியல்பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1994 மற்றும் 30.06.2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: http://www.joinindiancoastguard.gov.in

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்காரர், காவலர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மொத்த காலியிடங்கள்:23

பணி: தோட்ட பராமரிப்பாளர் - 13

பணி:வாட்ச்மேன் - 10

தகுதி: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

சுற்றுலா ஆணையர், 
சுற்றுலா ஆணையரகம், 
தமிழ்நாடு சுற்றுலா வளாகம், 
எண்.2, வாலாஜா சாலை, 
சென்னை- 600002.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018


மேலும், விண்ணப்ப மாதிரி,விண்ணப்ப படிவம், வயதுவரம்பு சலுகை, சம்பளம் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை பற்றி தெரிந்துக்கொள்ள :
www.tamilnadutourism.org  என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆர்.எ.சி நிறுவனத்தில் வேலை

டி.ஆர்.டி.ஓ என அழைக்கபடும் ராணுவ பாதுகாப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி கழக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் ஆட்சேர்ப்பு மற்றும் மதிப்பீட்டு மையம் (ஆர்.எ.சி.) நிறுவனத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட் - பி, பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் ஜூன் 1க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 41

பணி: சயின்டிஸ்ட் - பி

வயதுவரம்பு: 01.6.2018 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு :rac.gov.in

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...