Monday, May 21, 2018

செளத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வரும் பிரபல பொதுத்துறை வங்கியான செளத் இந்தியன் வங்கிக்கு நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் தற்போது காலியாக உள்ள 150 புரபெஷனல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 150

பணி: Probationary Officers (PO)

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் டூ தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.12.2017 தேயின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800. மற்ற பிரிவினருக்கு ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.southindianbank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விணணப்பிக்க வேண்டும். அன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
\
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.05.2018

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 2018-இல் நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்:புதுச்சேரி, சென்னை, கோவை, திண்டுக்கல், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர்.

எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேலும் முழுமையான விவரங்களுக்கு: : https://www.southindianbank.com/UserFiles/file/Notification_Probationary_Officers_May2018.pdf

பல் வலியை உடனடியாக குணப்படுத்த

  • முதலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் (தேங்காய் எண்ணெய் கிருமிகளை அழிக்கும்), சிறிதளவு கிராம்பு பொடி (இது வலியை மரத்து போக செய்யும்) சேர்த்து பேஸ்டு செய்ய வேண்டும். 
  • பின்பு மிதமான சூட்டில் உள்ள நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். 
  • பிறகு தயார் செய்த பேஸ்டை வலி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.
  • 15 நிமிடம் கழித்து இளஞ்சூடான நீரால் வாய் கழுவவும். இப்பொழுது பல்வலி நிச்சயமாக குறைந்து இருக்கும்.

108 ஆம்புலன்ஸ் சேவை பணிகளில் 116 பேருக்கு வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 116 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மற்றும் 104 ஆலோசனை மையம் மருத்துவச் சேவைகளை ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் சென்னை உள்பட தமிழகத்தின பல்வேறு மாவட்டங்களில் உள்ள 7 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர், அவசரகால உதவியாளர், தொலைபேசி கட்டுப்பாட்டு மைய ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்களில் 335 பேர் பங்கேற்றனர். இவர்களில் அவசரகால உதவியாளர் பணியிடங்களுக்கு 65 பேரும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணியிடங்களுக்கு 51 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...