Saturday, May 19, 2018

துறைமுகத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் வேலை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Tuticorin-626 004.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018

Friday, May 18, 2018

108-ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் | 19-05-2018

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் 19-05-2018 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இம்முகாம் நடைபெறும்.

மருத்துவ உதவியாளர்: பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவை உண்டு.

ஓட்டுநர்: 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73388 93080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன் 
காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... 
அதிகாலை விடிவதெல்லாம் 
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் 
உள்ளுக்குள்ளே சுழலுதடீ 
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் 
உயிருக்குள் ஒழிக்குதடீ 
கடலோடு பேச வைத்தாய் 
கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் 
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் ...

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...