Friday, May 18, 2018

108-ஆம்புலன்ஸ் சேவை வேலைவாய்ப்பு முகாம் | 19-05-2018

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், மருத்துவப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் 19-05-2018 சனிக்கிழமை நடைபெற உள்ளது.

108 ஆம்புலன்ஸ் சேவையை அளிக்கும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவனம் இந்த வேலை வாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இம்முகாம் நடைபெறும்.

மருத்துவ உதவியாளர்: பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., மருந்தாளுநர் பட்டயப்படிப்பு, டிஎம்எல்டி அல்லது அறிவியல் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்பு படித்த, 20 முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இரு பாலரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இந்தப் பணியிடத்துக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மனிதவளத் துறையின் நேர்முகத் தேர்வு ஆகியவை உண்டு.

ஓட்டுநர்: 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இலகுரக ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள், உயரம் 162.5 செ.மீ.க்கும் குறையாமல், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 73388 93080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன் 
காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் 
நிஜம் என்று நினைக்கவில்லை 
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான் 
நம்பி விட்டேன் மறுக்கவில்லை... 
அதிகாலை விடிவதெல்லாம் 
உன்னைப் பார்க்கும் மயக்கத்தில் தான் 
அந்தி மாலை மறைவதெல்லாம் 
உன்னைப் பார்த்த கிரக்கத்தில் தான்

காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ தொலைந்தேன்

உன்னைக் கண்ட நாள் ஒளி வட்டம் போல் 
உள்ளுக்குள்ளே சுழலுதடீ 
உன்னிடத்தில் நான் பெசியது எல்லாம் 
உயிருக்குள் ஒழிக்குதடீ 
கடலோடு பேச வைத்தாய் 
கடிகாரம் வீச வைத்தாய் 
மழையோடு குளிக்க வைத்தாய் 
வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து 
காதல் வைத்து காத்திருந்தேன் 
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்..
சிரித்தாய் இசை அறிந்தேன் 
நடந்தாய் திசை அறிந்தேன் 
காதல் என்னும் கடலுக்குள் நான் விழுந்தேன் 
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன் 
அசைந்தாய் நான் அன்பே அசைந்தேன் 
அழகாய் ஐயோ நான் தொலைந்தேன் ...

கறிவேப்பில்லையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக உணவில் நறுமணத்திற்க்காகவும், சுவைக்காகவும் சேர்த்து கொள்ளப்படும் கறிவேப்பில்லை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

கறிவேப்பில்லையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 120 நாள்களுக்கு தினமும் கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடலினை மெலிதாக வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்த சேகை உள்ளவர்கள் இந்த கறிவேப்பில்லை உடன் ஒரு பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

இரத்த சேகையை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கறிவேப்பில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் பச்சையாக இந்த கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...