Friday, May 18, 2018

கறிவேப்பில்லையின் மருத்துவ குணங்கள்

பொதுவாக உணவில் நறுமணத்திற்க்காகவும், சுவைக்காகவும் சேர்த்து கொள்ளப்படும் கறிவேப்பில்லை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

கறிவேப்பில்லையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி1, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்துகள் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் முடி வளர்ச்சிக்கும் இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் 120 நாள்களுக்கு தினமும் கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து உடலினை மெலிதாக வைத்து கொள்ள உதவுகிறது.

இரத்த சேகை உள்ளவர்கள் இந்த கறிவேப்பில்லை உடன் ஒரு பேரிச்சை பழத்தினை தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.

இரத்த சேகையை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கறிவேப்பில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் பச்சையாக இந்த கறிவேப்பில்லையை சாப்பிட்டு வர இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்து கொள்ள இந்த கறிவேப்பில்லை உதவுகிறது.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் | பழமொழி

பழமொழி:

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

பொருள்:

ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி.

தமிழ் விளக்கம்:

கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவிபாடும்’ என்பது இப்பழமொழியின் இன்னொரு வழக்கு. 

வெள்ளாட்டி என்பவள் வீட்டு வேலைகள் செய்யும் வேலைக்காரி.’கட்டுத் தறி’ என்பது என்ன? தறி என்றால் நெசவு என்பதால் கம்பர், வள்ளுவர் போல நெசவுத் தொழில் செய்துவந்த குலத்தைச் சேர்ந்தவரா? கம்பரின் வரலாற்றைப் பற்றி உள்ள கட்டுக் கதைகளில் அவர் நெசவாளர் என்ற செய்தி இல்லை.

சிலர் ’கட்டுத் தறி’ என்றால் பசுமாட்டைக் கட்டும் முளைக்கோல் என்று பொருள் கொள்கின்றனர். எனக்கென்னவோ ’கட்டுத் தறி’ என்றதன் சரியான பொருள் ’தறித்துக் கட்டிவைக்கப்பட்ட ஓலைச் சுவடிகள்’ என்றே படுகிறது. 

புலவர்கள் வீட்டில் பாட்டெழுத நறுக்கிய ஓலைச் சுவடிகள் இருப்பது வழக்கம்தானே? எனவே, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும்கூட கவிபாடும் என்பதே சரியான விளக்கம் என்று தோன்றுகிறது.

Thursday, May 17, 2018

மின்பகிர்மான கழகத்தில் என்ஜினியர் வேலை

பொதுத்துறை நிறுவனமான பவர்கிரிடு நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 10

தகுதி: பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக். பி.எஸ்சி (பொறியியல்) பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2018


மேலும் முழுமையான விவரங்களுக்கு : www.powergridindia.com

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...