Tuesday, May 15, 2018

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர் வேலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Lab Assistant

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 என்ற ஊதியக்கட்டு ஏழாவது ஊதியக்குழு

காலியிடங்கள்: 20

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.gptcusilai.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதல்வர்,
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி,
உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி,
மதுரை - 625 537

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: www.gptcusilai.org

பொறியியல் பட்டதாரிகளுக்கு ”National Instructional Media Institute” -ல் வேலை

சென்னையில் உள்ள ”National Instructional Media Institute”-இல் காலியாக உள்ள தொழிற்நுட்ப ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technical Consultant

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.35,000 - 70000

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரடெக்சன், சிவில், ஆட்டோமொபைல், ஐடி, கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.nimi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

The Executive Director, 

National Instructional Media Institute, 

Post Box 3142, CTI Campus, Guindy Industrial Estate,

Guindy, Chennai - 600 032. 

E-mail: chennai-nimi@nic.in


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.05.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு : www.nimi.gov.in

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் குரூப் 'ஏ' குரூப் 'பி' வேலை

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில் காலியாக உள்ள குரூப் 'ஏ 'மற்றும் குரூப் 'பி' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Sr.Biochemist - 02
பணி: Blood Transfusion Officer - 02
பணி: Scientist.II - 05
பணி: Assistant Blood Transfusion Officer - 02
பணி: Tutor in Nursing - 04
பணி: Scientist-I - 05
பணி: Clinical Psychologist/Psychologist - 04
பணி: Assistant Administrative Officer - 04
பணி: Transplant Co-ordinator - 01
பணி: Medical Social Service Officer Gd.II - 03
பணி: Jr.Engineer (Civil) - 06
பணி: Jr.Engineer (Electrical) - 03
பணி: Ophthalmic Technician Gd.I - 02
பணி: Jr.physiotherapist/Occupational Therapist - 13
பணி: Technical Assistant (ENT) - 02
பணி: Fire Safety Officer - 01
பணி: Assistant Dietician - 04
பணி: Technician (Radiotherapy) Gd.II - 12
பணி: Technical Officer (CWS) - 02
பணி: Social Psychologist - 03
பணி: Life Guard - 01
பணி: Physical Training Instructor - 02
பணி: Technician (Radiology) - 13

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். 

அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும், குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.05.2018 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு: https://mail.aiims.edu/images/pdf/recruitment/advertisement/recttcell-3-5-18.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...