Saturday, May 12, 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 43 மூத்த அலுவலர் (நிதி), மூத்த அலுவலர் (தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Officer (Finance)

காலியிடங்கள்: 23

மாதம் ரூ. 56,100-1,77,500

தகுதி: CA, CWA, MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


பணி: Senior Officer (Technical)

காலியிடங்கள்: 20

சம்பளம்: மாதம் ரூ.56,100-1,77,500

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் B.E அல்லது B.Tech அல்லது AMIE முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். எஸ், எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: General, BC, BC(M), MBC & DC & DAP பிரிவினர் ரூ. 500, SC, SC(A), ST பிரிவினர் ரூ.250

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  02.06.2018

முழுமையான விவரங்களுக்கு : http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf

தமிழக சுற்றுலாத்துறையில் வேலை

தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 13 தோட்டக்காரர் மற்றும் 10 காவலர் பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியான இந்திய குடிமகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: தோட்டக்காரர்
காலியிடங்கள்: 13
சம்பளம்:மாதம் ரூ.15,700 - 50,000

காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்:

1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 7
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 06

தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். தோடட்டங்கள் பராமரிப்பதில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச் சான்றி நகல் இணைக்கப்பட வேண்டும்). 

பணி: காவலர்
காலியிடங்கள்: 10 
மாதம் ரூ.15,700 - 50,000

காலியாக உள்ள சுற்றுலா அலுவலகம் விவரம்:

1. சுற்றுலா அலுவலகம் பூம்புகார் - 5
2. சுற்றுலா அலுவலகம் தூத்துக்குடி - 03
3. சுற்றுலா அலுவலகம் மதுரை - 01
4. சுற்றுலா அலுவலகம் தஞ்சாவூர் - 01


தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். கண்பார்வை தெளிவாக உள்ளது என சான்று(அரசு மருத்துவரிடரிமிருந்து பெற்று சமர்பிக்கப்பட வேண்டும்) முன்னாள் ராணுவ வீரர் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் காவலராக இரண்டு ஆண்டு பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (உரிய அனுபவச்சான்று நகல் இணைக்கப்பட வேண்டும்).

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினர் 30க்குள்ளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32க்குள்ளும், ஆதி திராவிடர் 35க்குள்ளும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளோர் தங்களது விண்ணப்பித்தினை கீழ்காணும் மாதிரி விண்ணப்பப் படிவத்தில் உள்ளவாறு வெள்ளைத்தாளில் தெளிவாக குறிப்பிட்டு எழுதி அனுப்ப வேண்டும்.




ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும்.

கல்விச் சான்று நகல், சாதிச் சான்று நகல், அனுபவச் சான்று நகல், முகவரி சான்று மற்றும் பிறப்புச் சான்று நகல் ஆகியவற்றின் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

சுற்றுலா ஆணையர், சுற்றுலா ஆணையரகம், 
தமிழ்நாடு சுற்றுலா வளாகம், 
எண்.2, வாலாஜா சாலை, சென்னை - 600 002 

-என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018


மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tamilnadutourism.org

Friday, May 11, 2018

மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி

மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு சார்பில், குறுகியகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறனற்றவர்களுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல், தையல் கலை, வீட்டு உபகரணங்கள், ஸ்கிரீன் பிரிண்டிங், புக் பைண்டிங், சில்லறை விற்பனைப் பிரிவு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி: செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சிக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 15 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி வரும் 14-ஆம் தேதி அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறும்.

மே 17-இல் சில்லறை விற்பனைப் பிரிவு பயிற்சி: சில்லறை விற்பனைப் பிரிவுப் பயிற்சியில் மாற்றுத் திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை. 8- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.

இவர்கள் மே 17-ஆம் தேதி சாந்தோம் ஹெல்ப் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்த அளவு இடங்கள் மற்றும் விடுதி வசதி உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மே 14-க்கு முன்பாக மையத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...