Friday, May 11, 2018

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 78 லட்சம் பேர் பதிவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 78.60 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30 -ஆம் தேதி நிலவரப்படி , இதற்கான விவரங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

பள்ளிப்படிப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பதிவு மூப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அவர்களுக்கு அரசுப் பணிகள் அளிக்கப்படும். கடந்த ஏப்ரல் 30 -ஆம் தேதி நிலவரப்படி, தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 78 லட்சத்து 60 ஆயிரத்து 322 ஆக உள்ளது.

இதில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 39 ஆயிரத்து 820 பேரும், 23 வயது வரையுள்ள பட்டதாரி மாணவர்கள் 18 லட்சத்து 93 ஆயிரத்து 812 பேரும், 35 வயது வரையுள்ளவர்கள் 29 லட்சத்து 85 ஆயிரத்து 298 பேரும் பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று, 36 வயது முதல் 56 வயது வரையில் 11 லட்சத்து 35 ஆயிரத்து 345 பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர் 6 ஆயிரத்து 47 பேரும் என, மொத்தமாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 78 லட்சத்து 60 ஆயிரத்து 322 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, May 10, 2018

சமையல் குறிப்பு

விரைவில் சமையல் குறிப்புகளை பற்றி பதிவிட உள்ளேன்.
தங்களது விருப்பங்களை தெரிவிக்கவும்.

இப்படிக்கு, தமிழ் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 

தமிழக அரசில் விவசாய அதிகாரி வேலை

தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள 192 விவசாய அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Agricultural Officer (Extension)

காலியிடங்கள்: 192

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயத் துறையில் பி.எஸ்சி பட்டம் மற்றும் பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்:

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 14.07.2018

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி்க்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/notifications/2018_09_AO_EXTENSION.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...