Thursday, May 10, 2018

ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை

கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள மண்ணுதியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் (ESAF) சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள 3 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3000

பணியிடம்: கேரளா

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Branch heads - 220

2. Assistant branch heads - 220

3. Sales officers/Retail Assets & Liability - 1500

4. Relationship officer - 400

5. Credit Officer - 100

6. Sales Officer - Trainee - 560

வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.esafbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://esafbank.com/wp-content/uploads/2018/04/esaf-recruitment-notification-april-2018-2.pdf

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் வேலை!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) நிரப்பப்பட உள்ள தலைமை மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம் வெளியிடப்படவில்லை.

பணி: மேலாளர்

சம்பளம்: மாதம் ரூ.1,40,000

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: உதவி பொது மேலாளர்

தகுதி: மேலாண்மை, வணிகவியல், கணினி அறிவியல், ஐடி போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர் நிலையில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,25,000

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Managing Director & CEO, 
Tamilnad Mercantile Bank Ltd Head Office, 
# 57, V. E. Road Thoothukudi 628 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய : https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_ADC20181901.pdf

அலுமினிய நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

நால்கோ (NALCO) என அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள 115 பட்டதாரி என்ஜினீயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 115. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 60 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும், மாற்றுத் திறனாளி களுக்கு 15 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல் - 54
2. எலக்ட்ரிக்கல் - 32
3. மெட்டலர்ஜி - 18
4. எலக்ட்ரானிக்ஸ் - 05
5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 06


தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெட்டலர்ஜி போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இவர்கள் கேட் -2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


வயது வரம்பு: 22.05.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கேட் மதிப்பெண், நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.


கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.nalcoindia.com/GET-2018%20Advt..pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...