Friday, May 4, 2018

எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

பழமொழி:

எடுப்பார் மழுவை, தடுப்பார் புலியை, கொடுப்பார் அருமை.

பொருள்:

அருஞ்செயல் ஆற்றுபவர்கள் உண்டு ஆனால் ஈகைக் குணமுடையோரைக் காணுதல் அரிது.

தமிழ் விளக்கம்:

மழு என்பது பழுக்கக் காய்ச்சிய இரும்பு. அதையும் கையால் பிடிப்பவர் உண்டு; புலியைத் தடுப்பார் உண்டு, ஆனால் எல்லோருக்கும் செயலில் எளிதாக உள்ள ஈகைக் குணம் மட்டும் காண்பது முன்சொன்ன அருஞ்செயல் ஆற்றுபவர்களை விட அரிதாக உள்ளது

Thursday, May 3, 2018

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்புப் பயிற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. தகுதியுடையவர்கள் இதில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைத் தொழில் சேவை மையம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச சிறப்புப் பயிற்சிகள், கணினி மென்பொருள் பயிற்சி ஆகியவற்றை வழங்கவுள்ளது.

சிறப்புப் பயிற்சி: பயிற்சிக் காலம் 11 மாதங்கள். மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று வயது 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.

கணினி பயிற்சி: "ஓ" அளவிலான ஓராண்டு கால கணினி மென்பொருள் இலவசப் பயிற்சி பெறுபவருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும். குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10 , + 2 தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 7, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 8. 

மேலும் விவரங்களுக்கு, 

சார் பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, 
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான வாழ்க்கைத் தொழில் சேவை மையம், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு இயக்குநரகம், 
56 சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-4 , 
தொலைபேசி எண். 044-24615112 -ஐ தொடர்பு கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் ஃபீல்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் விவரங்கள்:

பணி: டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.15,000 - 25,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில், டிப்பளமோ, டிகிரி முடித்தவர்கள் அல்லது ஜியோஇன்ஃபர்மேடிக்ஸ் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

GPS, Total Station operation work பணிகளில் களப்பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.


பணி: ஃபீல்ட் அசிஸ்டெண்ட்

காலியிடம்: 01

சம்பளம்: மாதம் ரூ.8,000 - 15,000

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான படிப்புடன், GPS, Total Station operation work-இல் குறைந்தது இரண்டாண்டுகள் களப்பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Director,
Centre for Survey Training and Research (C-STAR), 
Institute of Remote Sensing, 
Anna University, Chennai - 600 025.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 05.05.2018.

தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய: https://www.annauniv.edu/pdf/CSTAR%20APR%2018.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...