Sunday, April 22, 2018

விருதுநகரில் ஏப்.27 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏப். 27 ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏப். 27 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 5 முன்னணி நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன.

இதில் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ, பி.இ. (சிவில்) முடித்த ஆண்கள் மற்றும் தையல் தெரிந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் முகவராக 30 வயது முதல் 45 வயது முடிய உள்ளவர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பிற நிறுவனங்கள், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 

தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றார்.




Saturday, April 21, 2018

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை

பரோடா வங்கியின் மனிவளத்துறையில் காலியாக உள்ள 424 Senior Relationship Manager பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 424

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Relationship Manager - 375
பணி: Territory Head - 37
பணி: Group Head - 06
பணி: Operations Head - Wealth - 01
பணி: Operations Manager - Wealth - 01
பணி: Services and Control Manager - 01
பணி: Product Manager - Investments - 01
பணி: Compliance Manager (Wealth) - 01
பணி: NRI Wealth Products Manager - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பட்டதாரிகள் மற்றும் எம்பிஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 06.05.2018 தேதியின்படி 23 முதல் 45க்குள் இருக்க வேண்டும். அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf

செஞ்சி வட்டத்தில் கிராம உதவியாளர் பணி

செஞ்சி வட்டத்தில் காலியாக உள்ள 13 கிராமங்களுக்கு உதவியாளர்களை நேரடி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட கிராமங்களின் விவரம்: அஞ்சாஞ்சேரி, இல்லோடு, கடம்பூர், கல்லாலிப்பட்டு, கள்ளப்புலியூர், காரியமங்கலம், கொரவனந்தல், மரூர், மேலத்திப்பாக்கம், மேல்கூடலூர் மேல்ஒலக்கூர், தையூர், வீரணாமூர்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கக்கூடாது.

வயது வரம்பு: 1-1-2018 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் அருந்ததியர், பழங்குடியினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட மற்றும் சீர்மரபினர், முஸ்லிம் வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


இதர வகுப்பினர் 21 வயது நிறைவடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பணி நியமனம் செய்யப்படும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும்.

11,100-என்னும் ஊதிய விகிதத்தில் ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படும். நேர்காணலுக்கு வருபவர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படாது.

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் காலியாக உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ அல்லது 5 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்விச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை உள்ளிட்ட அனைத்து சான்றுகளை நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து சான்றுகளின் சான்றொப்பமிட்ட நகல்களையும் தவறாது இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை கைப்பட எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் 19-4-2018 முதல் 25-4-2018 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என செஞ்சி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...