Saturday, April 21, 2018

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டெக்னீசியன், உதவியாளர் வேலை

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 2018-2019-ஆம் ஆண்டிற்கான 179 குரூப்-பிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 179

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

17 STIPENDIARY TRAINEE / TECHNICIAN- B
பணி: Plant Operator - 42
பணி: Electrician - 20
பணி: Electronic Mechanic - 03
பணி: Instrument Mechanic - 11
பணி: Fitter - 31
பணி: Turner - 02
பணி: Machinist - 02
பணி: Welder - 03
பணி: Draughtsman (Mechanical) - 02

தகுதி: பத்தாம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

62 STIPENDIARY TRAINEES / SCIENTIFIC ASSISTANT

பணி: Mechanical Engineering - 22
பணி: Electrical Engineering - 12
பணி: Chemical Engineering - 08
பணி: Electronics Engineering - 05
பணி: Instrumentation Engineering - 02
பணி: Computer Science - 01
பணி: Civil Engineering - 02

தகுதி: பொறியில் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: B.Sc. Physics - 08

பணி: B.Sc. Chemistry - 02

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
\
Manager (HRM), HR Section, 
Kudankulam Nuclear Power Project, 
Kudankulam PO, Radhapuram Taluk, 
Tirunelveli District, Tamilnadu 627 106

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018

மேலும் முழுமையான விவரங்களை அறிய:

Friday, April 20, 2018

நகங்கள் பராமரிப்பு | NAIL MAINTENANCE




காரணங்கள்:

நகங்கள் ஆரோக்கியமாக வளர அவை உறுதியுடன் இருத்தல் மிக மிக அவசியம். அவ்வாறு இல்லையெனில் மிகவும் கடினம். மேலும் உடையும் தன்மை கொண்ட நகங்கள் கொண்டவர்களின் நிலைமை இன்னும் மோசம். இதற்கு பல காரணங்கள் உள்ளன அதிக நாட்கள் நகபூச்சு உபயோகித்தல், நகங்களை அடிக்கடி தண்ணீரில் நனைத்தல், முதுமை, ஹைபர் அல்லது தைராய்டு பிரச்சினை, தோல் சம்பத்தப்பட்ட நோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோலழற்சி, இரத்த சோகை, பூஞ்சை தொற்று என அடுக்கி கொண்டே போகலாம்.

செய்ய வேண்டியது:

 1. பயோட்டின் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், முட்டை, தக்காளி, பாதாம், காலிஃபிளவர், பருப்புகள், ஸ்ட்ராபெர்ரி, சோயாபான்ஸ், பால் போன்ற உணவுகளை உண்ண வேண்டும். தேவைபட்டால் உங்கள் மருத்துவரைப கலந்தாலோசித்து பிறகு பயோட்டின் உணவுகளை உண்ணலாம். 

2. பயோட்டின் நிறைந்த உணவுகள் மட்டும் அல்லது ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளான மீன், பால் பொருட்கள், இறைச்சி, விதைகள் மற்றும் கொட்டைகள், கீரை மற்றும் காய்கறிகள் என ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். 

3. தினமும் வாசலின் கொண்டு நகங்களை மசாஜ் செய்யுங்கள்.

4. தினமும் உடற்பயிற்ச்சி செய்யுங்கள், இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து நகங்கள் எப்பொழுதும் புது பொலிவுடன் இருக்கும். 

5. குறிப்பிட்ட இடைவேளையில் நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள்.

6. சிறந்த தயாரிப்பு மற்றும் தரமான நக பூச்சுகளை பயன்படுத்துங்கள்.

7. நகங்களை சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டுங்கள் தன்னால் வைட்டமின் டி நகங்களுக்கு எளிதாக கிடைக்கும். 

8. நிறைய தண்ணீர் குடியுங்கள். 

9. ஃக்யுடிசெல்சை வெட்டி எடுக்காமல் உள்ள தள்ளி விடுவது நோய் தொற்றை குறைக்கும். 

10. ஃக்யுடிசெல்சை ஈரப்பதத்துடன் வைத்திருக்க அதற்கான கிரீம் உபயோக படுத்துங்கள். 

11. நகங்களை மேல் பகுதியை தேய்த்து சுத்தமாக வையுங்கள், இதனால் நகம் உடைவதை தடுக்கலாம். 

12. வெளியில் செல்லும் போது, அதிக நேரம் நீரை கையாளும் பொழுது, ரசாயன பொருட்களை தொடும் பொழுது கையுறைகளை பயன்படுத்துங்கள்.

செய்யக்கூடாதவை:

1. அதிக நேரம் நீரை கையாளுதல் மற்றும் ரசாயன பொருட்களை கையாளுதல் ஆகியவற்றை தவிர்க்கவும். 

2. அசிட்டோன் மற்றும் பார்மால்டிஹைடு போன்ற ரசாயனம் கொண்ட நக பூச்சுகளை தவிருங்கள். 

3. செயற்கையான நகங்கள் உபயோகிப்பதை தவிருங்கள். 

4. ஆல்கஹால் கொண்ட ஹேண்ட் சானிடைசர் நகங்களின் ஈரப்பதத்தை எடுத்துவிடும் எனவே அவற்றை தவிருங்கள். 

5. நக பூச்சு நீக்கிகளை அதிகமாக உபயோகபடுத்த வேண்டாம் . 

6. கடைசியாக, நகங்களை கடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், இது உங்கள் நகங்களுக்கு மட்டும் அல்ல உடலுக்கும் தீங்கானது.


'அவென்சர் வார்' -ஸ்பெசல் லேப்டாப்

விரைவில் வெளியாகவுள்ள 'அவென்சர் இன்பைனிடி வார்' என்ற திரைப்படத்தின் கதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, மார்வெல் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து 3 ஸ்பெசல் எடிசன் லேப்டாப்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ஏசர்(Acer). 

கேப்டன் அமெரிக்கா வகை ஆஸ்பையர்6 லேப்டாப்பின் விலை ரூ63,999. தானஸ் வகை நிட்ரோ5 லேப்டாப்பின் விலை ரூ80,999 மற்றும் அயர்ன் மேன் வகை ஸ்விட் 3 லேப்டாப்பின் விலை ரூ79,999 ஆகும்.

இந்த 3 வகை லேப்டாப்களும் குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஏசர் டீலர் கடைகளிலும் ஏப்ரல் 20 முதல் கிடைக்கும். ஏப்ரல் 23 முதல் ஆன்லைன் சந்தையில் அமேசானில் மட்டும் கிடைக்கும்.




ஆஸ்பையர்6 - கேப்டன் அமெரிக்கா லேப்டாப்பில் சிறப்பம்சமாக, கேப்டன் அமெரிக்காவின் ஐகானான பென்டகிராம் அலுமினிய வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 8ம் தலைமுறை கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB DDR4 ரேம், 1TB ஹார்டு டிரைவ், நிவ்டியா ஜீபோர்ஸ் MX150 GPU மற்றும் எச்.டி வெப்கேமரா போன்ற வசதிகள் உள்ளன. டால்பி ஆடியோ வழங்கும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், வைபை 802.11ac உடன் 2×2MIMO ஆண்டானா மற்றும் ஜிகாபிட் லேன் வசதியும் இந்த லேப்டாப்பில் உள்ளது. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி, 3.0, 2.0 போர்ட்களும் உள்ளன.

அடுத்ததாக, நைட்ரோ 5- தானஸ் லேப்டாப்பை பொறுத்தவரை சிறப்பம்சமாக, தானஸ் குறியீடு ஐ.எம்.ஆர் தொழில்நுட்பம் மூலம் செம்மையான வெளிப்புறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதில் இன்டெல் 7ம் தலைமுறை கோர் i5 7300HQ சி.பி.யூ உடன்32GB வரை பயனர் மேம்படுத்தக்கூடிய 8GB DDR4 ரேம், 128GB SDD ப்ளஸ் உள்ள 1TB ஹார்டு டிரைவ், 4GB GDDR5 வி-ரேம் உள்ள நிவ்டியா ஜீபோர்ஸ் GTX 1050 போன்ற வசதிகள் உள்ளன. 15.6 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை மற்றும் ஏசர்ஸ் கூல் பூஸ்ட் தொழில்நுட்பம் உள்ள இரட்டை எக்ஸாஸ்ட் பேன் உள்ளது.

கடைசியாக, ஸ்விட் 3 அயர்ன் மேன் லேப்டாப் வெறும் 1.6கிலோ எடையுடன் 17.95 மில்லிமீட்டர் அடர்த்தி கொண்டது. சிவப்பு நிறத்திலான இந்த லேப்டாப்பில், அயர்ன் மேனின் சிக்நேச்சர்ஆர்க் ரியேக்கடரும், பவர் ஆன் செய்திருக்கும் போது ஒளிரும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் இன்டெல் கோர் i5 8250U சி.பி.யூ உடன் 8GB ரேம், 256GB SSD,

கிராப்பிக்ஸ் மற்றும் 10மணி நேரம் தாக்குபிடிக்கக்கூடிய பேட்டரி போன்ற வசதிகள் உள்ளன. வைபை 802.11ac , 14 இன்ச் முழு எச்.டி ஐ.பி.எஸ் திரை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வசதிகளும் உள்ளன.


இவற்றை வெளியிட்டு ஏசர் இந்தியாவின் சி.எம்.ஓ சந்திரஹாஸ் பனிகிரகி பேசுகையில், இந்த டிஸ்னி கதாபாத்திரங்கள் மூலம் மார்வெல் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களுடன் மேலும் நெருக்கமாக்குகிறது. புதிய அனுபவம், பொழுதுபோக்கு மற்றும் அதீத கேமிங் அனுபவம் வேண்டுமென்பவர்கள், அவென்சர் மற்றும் மார்வெல் யுனிவெர்ஸ் ரசிகர்களை இது கவரும் என்றார்.


தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...