Wednesday, April 11, 2018

நெட் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.12- நாளை கடைசி நாள்


கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (ஏப்.12) முடிவடைய உள்ளது.


இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 

2018-ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்வானது ஜூலை 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாளாகும். கட்டணம் செலுத்த ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.

இரண்டு தாள்கள் மட்டுமே...இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி வேலைக்கு விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு: தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழகத்தின் கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி வேலூர் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 320 நீதிபதிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து வரும் மே.7 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Civil Judge

காலியிடங்கள்: 320


தகுதி:


சட்டத்துறையில் பட்டம் பெற்று தமிழ்நாடு பார் கவுன்சில் அல்லது இந்தியாவில் உள்ள வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்த பார் கவுன்சிலில் பதிவு செய்திருப்பதுடன் வேண்டும். அறிவிப்பு வெளியான நாளில் எந்த நீதிமன்றத்திலாவது வழக்கறிஞராகவோ அல்லது பிளீடராகவோ பயிற்சி பெற வேண்டும். விரிவான தகுதியை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு:

01.07.2018 தேதியின்படி குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

மாதம் ரூ.27,700- 770-33,090 - 920 - 40450- 1080- 44770.

தேர்வுக் கட்டணமாக ரூ.500 ம், பதிவுக் கட்டணமா ரூ.150 ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை நெட் பேங்கிங், வங்கி அட்டைகள் மூலம் செலுத்தலாம். ஏற்கனவே, டிஎன்எஸ்சியில் இணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்பவர்கள் பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.05.2018


முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 09.06.2018


மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள், விரிவான தகுதிகள், சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய,

காற்றை சுத்தம் செய்யும் டயர்



நகர்ப்புற காற்று மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பவை வாகனங்களே. அதே வாகனங்களால், காற்று மாசு பாட்டை குறைக்க உதவ முடிந்தால் எப்படி இருக்கும்.

ஜெனீவாவில் அண்மையில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், டயர் தயாரிப்பாளரான, 'குட்இயர்' ஒரு புதுமையை அறிமுகப்படுத்தியது.

'ஆக்சிஜன்' என்ற புதுமையான அந்த சக்கரத்தின் சுவர்களில், பாசிகள் வளர்கின்றன. 

டயர் தரையை தொடும் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இடைவெளிகள் வழியாக, ஈரப்பதம் டயருக்குள் வர, அதை வைத்து பாசி வளர்கிறது. 

இந்தப் பாசி, காற்றிலுள்ள, கார்பன் - டை - ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடும். 

மேலும், அது பச்சையம் தயாரிக்கும் போது நிகழும் வேதி வினை மூலம், சிறிதளவு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.

பாரிஸ் போன்ற நகரில் ஓடும் எல்லா வாகனங்களும், ஆக்சிஜன் டயர்களை மாட்டியபடி ஓடினால், ஆண்டுக்கு, 4,000 டன் அளவுக்கு, பாரிசின் காற்றிலுள்ள கரியமில வாயுவை, மறுசுழற்சி செய்ய முடியும் என்கிறது குட்இயர்.

ஆக்சிஜன் தயாரிக்கும் சிறிதளவு மின்சாரம், வாகனத்தில் உள்ள உணரிகள், சில விளக்குகள், தகவல் அறிவிக்கும் மின் பலகை போன்றவற்றை இயக்கவும், பயன்படுத்தவும் முடியும். 

இப்போதைக்கு, வெகு சில ஆக்சிஜன் டயர்களை மட்டுமே, குட்இயர் தயாரித்துள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே, அது சந்தைக்கு வரும். சாலையில் ஓடும்.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...