Tuesday, July 10, 2018

கொங்கன் ரயில்வேயில் வேலை | Recruitment of Junior Scale Executives in Konkan Railway

கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (கேஆர்சிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Scale Executives, Accounts பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள கணக்கியல், வர்த்தகம் போன்ற துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  06

பணி: Junior Scale Executives (Traffic)

பணி: Accounts

பணி: Junior Scale Executives (Personnel)

தகுதி: சிஏ, சிஎம்ஏ, மார்கெட்டிங், சேல்ஸ், லாஜிஸ்டிக், டிரான்போர்ட்ஸ், எச்ஆர் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.konkanrailway.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Senior Recruitment Officer, 
Konkan Railway Corporation Ltd, 
Belapur Bhavan, Sec-11, CBD/ Belapur, 
Navi Mumbai-400614.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.07.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 19.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.konkanrailway.com/uploads/vacancy/1529403124NOTIFICATION_12-2018.pdf"

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி | Vacancies in Madras Veterinary College | TANUVAS

சென்னை வேப்பேரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள லேபரேட்டரி, அனிமல் அட்டெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Laboratory/ Animal attendant

காலியிடங்கள்:  02

சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்வு அளிக்கப்படும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 18.07.2018.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

The Director,
Directorate of Clinics,
Madars Veterinary College,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Vepery, Chennai-7.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tanuvas.tn.nic.in/nea/vacancies/dc_laa_pmu_2018.pdf

Sunday, July 8, 2018

ரயில்டெல் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை | Railtel Corportion of India Ltd Recruitment

மினி ரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical) 

காலியிடங்கள்:08

சம்பளம்:மாதம் ரூ. 40,000-1,40,000 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics &  Telecom; Telecom; Electronics அல்லது Electronics & Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி (என்ஜினீரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.

வயது வரம்பு: 14.07.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2018 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.railtelindia.com/images/careers/Vacancy%20notice%20-for%20website_29%20june.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...