Sunday, July 8, 2018

ரயில்டெல் நிறுவனத்தில் துணை மேலாளர் வேலை | Railtel Corportion of India Ltd Recruitment

மினி ரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்டெல் கார்ப்பரேசன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical) 

காலியிடங்கள்:08

சம்பளம்:மாதம் ரூ. 40,000-1,40,000 வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் Electronics &  Telecom; Telecom; Electronics அல்லது Electronics & Instrumentation போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக், பி.எஸ்சி (என்ஜினீரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ரூ.500. எஸ்சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250.

வயது வரம்பு: 14.07.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: GATE 2018 மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.railtelindia.com/images/careers/Vacancy%20notice%20-for%20website_29%20june.pdf

முதுகலை பட்டதாரிகளுக்கு பிரசார் பாரதியில் வேலை | Engagement of Monitoring-cum-Content Assistants

மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான இந்திய வானொலியின் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஓப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Monitoring-cum-Content Assistants

காலியிடங்கள்: 10

தகுதி: இதழியியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் முதுகலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:விண்ணப்பத்தார்கள் தங்களது சுய விபரத்தை ஏ4 வெள்ளத்தாளில் தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Director (Programmes),
Room No.403, New Broadcasting House,
External Services Division,
All India Radio,
Parliament Street,
New Delhi - 110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2018

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை | Careers in TNPL Medical Officer Posts

கரூரில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனத்தில் (டிஎன்பில்) நிரப்பப்பட உள்ள மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 02>

பணி:Medical Officer (Junior Officer grade) - 01

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 48,600

பணி: Medical Officer (Assistant Officer grade)- 01

சம்பளம்: மாதம் ரூ. 66,100

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி 3 மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  http://www.tnpl.com/careers/biodataform.pdf விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

CHIEF GENERAL MANAGER (HR),
TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED,
KAGITHAPURAM-639 136,
KARUR DISTRICT, TAMIL NADU.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2018.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/tnpl_medical_officer_posts_04-07-18.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...