Thursday, July 5, 2018

ரெப்கோ வங்கியில் உதவி மேலாளர் வேலை | Recruitment for the post of Assistant Manager

ரெப்கோ வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்துறையில் பட்டம் பெற்று அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : உதவி மேலாளர் (சட்டம்)

காலியிடங்கள்:03

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.எல் (அல்லது) எல்எல்பி தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The General Manager (Admin), 
Repco Bank Ltd, P.B.No.1449, 
Repco Tower, No:33, North Usman Road, 
T.Nagar, Chennai - 600 017.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.708/- (INCLUDES GST @ 18%) (Non-refundable) இதனை REPCO BANK RECRUITMENT CELL என்ற பெயருக்கு பேங்க் பே ஆர்டர் அல்லது வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://repcobank.com/uploads/career/Recruitment_for_the_post_of_Assistant_Manager-Legal.pdf"


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் வேலை | Careers in Defence Research & Development Organisation | DRDO

மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: மெக்கானிக்கல் என்ஜினியர்

காலியிடங்கள்: 19

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பி.ஈ. அல்லது பி.டெக். முடித்து GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் விலக்கு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drdo.gov.in/drdo/whatsnew/advt_133_.pdf

இந்திய ரிசர்வ் வங்கியில் அதிகாரி வேலை | Direct Recruitment for the posts of Officers in Grade ‘B’ in RBI

இந்திய வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தற்போது வங்கிகளில் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள கிரேடு பி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 166

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Officers in Grade - B (DR) - General

காலியிடங்கள்: 127

தகுதி: 60 சதவீதம் மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade - B (DR) - DEPR

காலியிடங்கள்: 22

தகுதி: Economics, Econometrics, Quantitative Economics, Mathematical Economics, Integrated Economics Course, Finance போன்ற துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officers in Grade - B (DR) - DSIM

காலியிடங்கள்: 17

தகுதி: Statistics, Mathematical Statistics, Mathematical Economics, Econometrics, Statistics &  Informatics, Applied Statistics & Informatics போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு குறித்த சலுகைகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ.35,150 + இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை:  இரு கட்டமான ஆன்லைன் எழுத்துத்த தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.850. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2017

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நிலை 1 தேர்வு(16.08.2018) மற்றும் நிலை 2 தேர்வு (06 மற்றும் 07.09.2018) தேதிகளில் நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3503

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...