Monday, July 2, 2018

விளையாட்டு ஆணையத்தில் வேலை | JOB OPPORTUNITIES IN SPORTS AUTHORITY OF INDIA

லக்னோவில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள வார்டன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 4 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பணி: Warden

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.16,188

வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு வருபவர்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.07.2018

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 

Executive Director, 
Sports Authority of India, 
Regional Centre, Sarojini Nagar, 
Kanpur Road, Lucknow(UP).

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : www.sportsauthorityofindia.nic.in 

ஜாகுவார் ஐ-பேஸ் ஸ்பெஷல் | JAGUAR I-PACE SPECIAL REVIEW

ஜாகுவாரின் முதல் எலெக்ட்ரிக் 5 சீட்டர் ஸ்போர்ட்ஸ் காரான i-பேஸ் பற்றி பார்க்கலாம்.


 JAGUAR I-PACE


நீட் அண்டு ரிச்சாக இருக்கிறது டேஷ்போர்டு. ஆனால், எல்லாவற்றிலும் தொழில்நுட்பம் கொட்டிக் கிடக்கிறது. கிளாஸ் ரூஃபில்கூட ஒரு டெக்னாலஜி. இன்ஃப்ராரெட் கதிர்களை அப்ஸார்ப் செய்வதால், வெயிலில்கூட சில் பயணம் கிடைக்குமாம்.

எனவே, சன் ஷேடு தேவையில்லை. விண்ட்ஷீல்டில் ஹெட்-அப் டிஸ்ப்ளே இருக்கிறது. நீங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரையோ, ரிவர்ஸ் கேமராவையோ தனியாகப் பார்க்க வேண்டியதில்லை.

எல்லாமே விண்ட்ஷீல்டில் வந்துவிடும். 656 லிட்டர் பூட் ஸ்பேஸில், ஸ்பேர் வீலுக்கான புரொவிஷன் இல்லாததற்கு சில தொழிற்நுட்ப காரணங்கள் இருக்கலாம்.

இதில் EV நேவிகேஷன் என்றொரு வசதி உண்டு. டிராஃபிக் டேட்டாக்களை அப்டேட் செய்து, உங்கள் நேவிகேஷனில் தருவதுதான் இந்த சிஸ்டம். நீங்கள் போகும் சாலையில் கிளைமேட் எப்படி இருக்கிறது, எந்தச் சாலையில் டிராஃபிக் அதிகம்-குறைவு, உங்கள் டெஸ்டினேஷன் போகும் வரை பேட்டரி சார்ஜ் தாங்குமா, சார்ஜ் குறைவாக இருக்கும் பட்சத்தில் சார்ஜிங் ஸ்டேஷன்களை நேவிகேட் செய்து அந்தப் பக்கம் காரைத் திருப்பச் சொல்வது என்று மல்ட்டி டாஸ்க்கிங் வேலைகளைச் செய்வதுதான் இந்த EV நேவிகேஷன்.

டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டார்ட் பட்டனைத் தட்டி, ‘Ready’ ஐகான் வரும் வரை காத்திருக்க வேண்டும். ‘D’ மோடில் செலெக்ட் செய்து, ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்... நாம் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கிறது. அந்தளவு அமைதியோ அமைதி. 

ஜாகுவார் என்பதைத் தாண்டி, எலெக்ட்ரிக் மோட்டார் என்பதுதான் இதற்குக் காரணம். இதில் 90KWH லித்தியம் ஐயன் பேட்டரி பேக், கேபின் ஃப்ளோருக்குக் கீழே இருக்கிறது. இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள். 

ஒவ்வொன்றும் செம லைட் வெயிட். 80 கிலோதான். 400 bhp பவரும், 69.6 kgm டார்க்கும் இரண்டிலும் சேர்ந்து அவுட்புட் கிடைக்கிறது. 

4.8 விநாடிகளில் 0-100 கி.மீயைத் தொட்டு புகையே இல்லாமல் பறக்கிறது.

4 வீல் டிரைவ் சிஸ்டம். பிளைண்ட் கார்னரிங்கில் செம கிரிப். எப்படிப்பட்ட வளைவிலும் திரும்பலாம். 

எலெக்ட்ரிக் கார் என்றால், ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இல்லாமலா? பிரேக் பிடிக்கப் பிடிக்க, அதன் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படுவதுதான் RGBS. 

அதிலும் 2 லெவலைக் கொடுத்து அசத்திவிட்டது ஜாகுவார். ‘High’ ஆப்ஷனில், இன்ஜின் பிரேக்கிங்கே செம ஸ்ட்ராங்காக இருப்பதால், சில நேரங்களில் பிரேக்கில் கால் வைக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை - சில டிராஃபிக் சிக்னல்கள் தவிர்த்து. எனவே, ஹை ஸ்பீடில்கூட பேட்டரியில் எனர்ஜி சேமிக்கப்படுகிறது.




கிட்டத்தட்ட 50 செ.மீ ஆழம் தண்ணீர் வரை போகுமாம் i-பேஸ். ஜாகுவாரின் ‘ஆல் சர்ஃபேஸ் புரோக்ரஸ் கன்ட்ரோல்’ தொழில்நுட்பம், இந்த த்ராட்டிலிங்கை தண்ணீருடன் மிக்ஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ளும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம், ஸ்டீயரிங் கன்ட்ரோல் மட்டும்தான்.

வாடி என் தங்க சிலை | காலா | VAADI EN THANGA SELA LYRICS IN TAMIL| KAALA MOVIE





வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை ராவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் 
சரியா....!

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில


நெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ
மாஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுதடி

பேட்டைக்குள்ள பொல்லாதவன்...
ஹேய்... பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ
போட்ட கோட்டைத் தாண்டாதவன் என்
வீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி
உன் பின்னால தள்ளாடி வந்தேனடி
சோகத்தெல்லாம் மூட்டை கட்டி 
கொண்டாட பொண்டாடி வந்தாயடி
வாடி என் தங்க சிலை...

வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு


அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா
சேட்டை எல்லாம் செய்யாதவன்...
சேட்டை எல்லாம் செய்யாதவன் பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ
வீடையெல்லாம் ஆளுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி
...
ஹேய்.. கோட்டை எல்லாம் ஆழுற வயசில 
கண்ணே உன் கண்ஜாடை போதுமடி..
வாடி...
வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை றாவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் 
சரியா....!

தொட்டாப் பறக்கும் தூளு... கண்ணு பட்டா பறக்கும் பாரு...

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...