Thursday, June 7, 2018

அற்புத முலிகை | பிரியாணி இலை

பிரியாணி இலை
சமையலறையில் இருக்கும் பிரியாணி இலை, சமையலில் உணவின் மணத்தையும், ருசியையும் அதிகரிக்க மட்டுமின்றி, அதன் நறுமணம் பல அரோமாதெரபிகளில் சுவாச பிரச்சனை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.

மனதை ரிலாக்ஸ் அடையச் செய்வதற்கு பிரியாணி இலையை வீட்டின் ஒரு அறையினுள் ஒரு பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் எரிக்க வேண்டும். பின் அந்த அறையிலேயே 10 நிமிடம் இருந்து, அதன் நறுமணத்தை நன்கு சுவாசிக்க வேண்டும்.

பிரியாணி இலையின் நறுமணம் தீங்கு விளைவிக்கும் மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும்.

பிரியாணி இலையை வீட்டினுள் எரித்தால், வீட்டில் இருக்கும் துர்நாற்றம் வெளியேறி, வீடே நல்ல நறுமணத்துடன் இருக்கும். மேலும் இந்த நறுமணம் வீட்டில் நேர்மறை ஆற்றல்களை உற்பத்தி செய்யும்.

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி - அப்புச்சிகிராமம்:

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி 
கட்டிபுட்டாளே என்ன இருக்கி 
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....(2)

யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

குத்தாலத்து சாரலபோல் நல்ல‌சிரிக்க என் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்னெஞ்சில‌ ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது
தடுமாரும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...

என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...

Wednesday, June 6, 2018

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நாளை புதன்கிழமைக்குள் (ஜூன் 6) மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: இணை பேராசிரியர் - 05

சம்பளம்: மாதம் ரூ.25,000

வயது வரம்பு: 20.06.2018-ஆம் தேதியின் படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NHTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2018. நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவு வெள்ளைத் தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் புகைப்படம் இணைத்து ihmpusa@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://ihmpusa.net/wp-content/uploads/2018/05/Advertisement-for-the-post-of-teaching-associate.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...