Wednesday, June 6, 2018

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 05

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 05

சம்பளம்:மாதம் ரூ.15,700 - 50,000 வழங்கப்படும்.

தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவராகவும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவார்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 02.07.2018

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

அரசு சார்பு செயலாளர், 
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 
தலைமைச் செயலகம், சென்னை-9

விண்ணப்பம்

Tuesday, June 5, 2018

தலை முடி அடர்த்தியாக வளரச் செய்யும் எலுமிச்சைச் சாறு

1. உங்கள் கூந்தல் மிகவும் பிசுபிசுப்பாக இருக்கிறதா? 

அதற்கும் எலுமிச்சைச் சாறு பயன்படும், ஓர் எலுமிச்சையை முழுக்கச் சாறு பிழிந்து, அத்துடன் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் அதனைத் தலையில் தடவி, அரை மணிநேரத்துக்குப்பின் குளியுங்கள். இதன்மூலம் சேபேசியஸ் சுரப்பியில் எண்ணெய் அதிகமாகச் சுரக்காது, பிசுபிசுப்பு குறையும்.

2.பொடுகுப் பிரச்சனையா?

சிலருக்குப் பொடுகுப் பிரச்சனை அதிகமாக இருக்கும், குறிப்பாக, குளிர்காலத்தில் பூஞ்சைத்தொற்றால் நிறைய பொடுகுகள் வரும், இதற்கு எலுமிச்சைச்சாறுடன் நீர் கலந்து தலையில் தடவிக் காயவிடவேண்டும், பிறகு அதனை அலசினால் பொடுகு பறந்துவிடும்!

3. கூந்தல் அரிக்கிறதா? 

எலுமிச்சையைச் சாறு பிழிந்து அரைமூடிமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், அத்துடன் கொஞ்சம் தயிரைச் சேர்த்துத் தலையில் தேயுங்கள், அரைமணிநேரம் விட்டு அலசுங்கள், அரிப்பு காணாமல் போய்விடும்!

4. அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறுடன் ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவு தடவவேண்டும். இதனைக் கூந்தலின் அடிமுதல் நுனிவரை தேய்த்துவிட்டு 40 நிமிடம் கழித்துக் குளிக்கவேண்டும், இதன்மூலம் முடி வளர்ச்சி பெருகும், கூந்தல் அடர்த்தியாகும்.

6. முடி அடிக்கடி உதிர்கிறதா? 

எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, அதே அளவு மிளகுத்தூள் சேர்த்துத் தேயுங்கள், காய்ந்தவுடன் அலசுங்கள், முடி உதிர்வது குறையும்.

5. கூந்தல் வளைந்திருக்கிறதா? அதை நேராக்க விருப்பமா?

எலுமிச்சைச் சாறுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தேயுங்கள், ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள், நிமிர்ந்த கூந்தலால் உங்கள் தன்னம்பிக்கையும் நிமிர்ந்து நிற்கும்.

7. கூந்தல் மிகவும் அழுக்காக இருக்கா?

கூந்தல் அழுக்காக இருந்தால், சரும துவாரங்களில் அழுக்கு தங்குகிறது என்று பொருள், இதற்கும் எலுமிச்சைச் சாறைப் பூசலாம், இதனால் தலையிலுள்ள அழுக்கு நீங்கும், கூந்தல் அழகாகும்.

மரணத்திற்கு முன் ஏற்படும் அறிகுறிகள்



பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்.

ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.

ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்.

  • மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்.
  • ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்.
  • ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
  • ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
  • ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
  • ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...