Monday, June 4, 2018

இந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டர் நாளை அறிமுகமாகிறது



Xather-S340

பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ஏத்தர் நிறுவனம் ஏத்தர் எஸ்-340 என்ற ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இதற்கான பஸ்ட் லுக் வெளியான போதே மக்கள் மத்தியில் ஏகே பித்த எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் அந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் தேதி வெளியாகியுள்ளது.

இந்த ஸ்கூட்டர் வரும் 5ம் தேதி முதல் விற்பனைக்க வருகிறது. இது தான் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக வெளி வருகிறது. இதில் பல உயர்ரக தொழிற்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் எலக்ரிக் பேட்டரியில் இயங்ககூடியது. ஆனால் இந்தியாவில் அதிக சார்ஜ் ஏற்றும் மையங்கள் இல்லாததால் இந்த ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகாது என அந்நிறுவனம் கருதியது.

இதையடுத்து இந்த பைக்கை முதற்கட்டமாக பெங்களுருவில் மட்டும் விற்பனை செய்வது எனவும், அதற்கு முன்னர் பெங்களூருவில் சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு கடந்து வாரம் சார்ஜ் ஏற்றும் மையங்களும் நிறுவப்பட்டது.

அதில் ஏத்தர் ஸ்கூட்டர்கள் மட்டும் அல்லாமல் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையோ அல்லது கார்களையோ சார்ஜ் ஏற்றி கொள்ளலாம். இதையடுத்து தனது தயாரிப்பான ஏத்தர் எஸ் 340 ஸ்கூட்டரை வரும் 5ம் தேதி அறிமுகப்படுத்துகிறது.

ஏத்தர் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு துவங்கப்பட்டு 55 பைக்குகளை டிசைன் செய்துள்ளது. அதன் மூலம் இதுவரை 50,000 பைக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் தயாரித்துள்ள ஏத்தர் ஸ்கூட்டருக்கு தற்போதே பல சப்ளையர்கள் மற்றம் டீலர்கள் தொடர்பு கொள்ள துவங்கி விட்டது.

இந்த பைக் முழுவதும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓயிட் பீல்டு என்ற ஏரியாவில்தான் அசம்பிள் செய்யப்படுகிறது. இந்த பைக்கை பொரத்த வரை ஐபி 67 வாட்டர் ப்ரூப் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. இது காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ. வரை எடுத்து செல்லும், மேலும் பைக்கில் 72 கிமீ. வேகத்தில் செல்லலாம்.

ஆனால் 40 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் தான் முழு பேட்டரி சார்ஜில் 80 கி.மீ. வரை பயணம் செய்ய முடியும். மேலும் இந்த பைக்கில் உள்ள பேட்டரியும், 50,000 கி.மீ. அல்லது 5-6 வருடம் வரை உழைக்கும் திறன் படைத்தது. மேலும் இந்த பைக் 1 மணி நேரத்தில் 80 சதவீத சார்ஜூம், 3 மணி நேரத்தில் முழு சார்ஜூம் பெற்று விடும்.

இந்த ஸ்கூட்டரில் சிறப்பு வசதியாக ஹைடெக் எல்இடி கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கும் பைக்கில் இது போன்ற கன்சோல் பொருத்தப்படும் முதல் பைக் இது தான். மேலும் இது க்ளவுட் கனெக்டட் ஆக செயல்படும்.

இதனால் தற்போது அதில் உள்ள டேட்டாக்கள் எல்லாம் க்ளவுடில் பதிவாகியிருக்கும். அதை பின்னர் வாடிக்கையாகளர்கள் பார்த்து கொள்ளலாம். உதாரணமாக இந்த பைக்க எந்த வழியாக சென்றது என்ற மேப் இதில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும். அதில் பதிவானதை நாம் பார்க்க முடியும்.

மேலும் இந்த பைக்கில் ஓடிய எனப்படும் ஓவர் தி ஏர் என்ற முறையில் சாப்வேர்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் அடுத்த அப்பேட்டை பெரும் போது இந்த பைக்கில் பொருத்தப்பட்ட சாப்வேரிலும் நாம் அப்டேட்களை பெற முடியும்.

இந்த பைக் வரும் 5ம் தேதி அதிகார பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கான புக்கிங்கும் துவங்குகிறது. தெடார்ந்து ஜூலை மாதம் இந்த பைக்குகள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது. இதன் விலை அறிமுக நாள் அன்றே வெளியிடப்படும்.

Sunday, June 3, 2018

வருமான வரித்துறையில் வேலை

இந்திய வருமான வரித்துறையின் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள 32 எம்டிஎஸ், ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 32 

பணி: Inspector of Income Tax - 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Tax Assistant - 11

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Multi Tasking Staff - 14

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் 2015, 2016, 2017, 2018-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய, பல்கலைக்கழக, சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விளையாட்டு திறன் தேர்வு சென்னையில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலை

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் அட்வைசர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஜூனியர் அட்வைசர் - 01

வயது வரம்பு: 61க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500

தகுதி: பி.ஏ, பி.காம், பி.எஸ்சி., முடித்து குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் டூயுட்டி ப்ரீ தொழிலில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.theashokgroup.com/index.php?option=com_circulars&view=carrier&pid=45&lang=en  என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.theashokgroup.com/images/positions/20180523_173309.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...