Friday, June 1, 2018

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி தொகையுடன் கூடிய அளிக்கப்பட உள்ள மெட்ரோ ரயில் டெக்னாலஜி மற்றும் மேனேஜ்மெண்ட் மேற்படிப்பு பயிற்சிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: சென்னை

பயிற்சி:  Metro Rail Technology and Management

காலியிடங்கள்: 25

துறைவாரியான காலியிடங்கள்: 
  • Civil - 5, 
  • Electrical - 10, 
  • Electronics - 8, 
  • Mechanical - 2
வயது வரம்பு: 27.05.2018 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சியின் மாத உதவித்தொகை: மாதம் ரூ.20,000

பணி: ஒரு ஆண்டு பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு உதவி மேலாளர் தரத்தில் மாதம் ரூ.40,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்படுவர்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2018

விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: https://chennaimetrorail.org/wp-content/uploads/2018/05/Advertisement_No.CMRL-HR-04-2018.pdf

ஆவின் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஓட்டுநர் வேலை

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் ஓட்டுநர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணியிடம்: தஞ்சாவூர்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: மேலாளர் - 02

சம்பளம்: மாதம் ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ.5100

பணி: ஓட்டுநர் - 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரு.2400

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2400

தகுதி: 8 ஆம் வகுப்பு, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

General Manager, 
Thanjavur District Cooperative Milk Producers Union Ltd.,
Nanjikkottai Road, Thanjavur, 
PIN Code :- 613 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 13.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.aavinthanjavur.com/downloads/thanjavur-aavin-recruitment-notification-2018.pdf

தமிழ்நாடு நீதித்துறையில் துறையில் அதிகாரி பணி

தமிழ்நாடு நீதித்துறையில் துறையில் காலியாக உள்ள 16 மொழிபெயர்ப்பாளர், மொழிபெயர்ப்பாளர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முதுநிலை தமிழ், பி.எல். மூன்று அல்லது ஐந்தாண்டு படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Translator (மொழிபெயர்ப்பாளர்)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

தகுதி: தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத் பேச தெரிந்திருக்க வேண்டும்.

பணி: Translation Officer (மொழிபெயர்ப்பாளர் அதிகாரி)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: தமிழில் முதுகலை பட்டம், சட்டத்துறையில் மூன்று அல்லது ஐந்தாண்டு பி.எல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் வங்கி அட்டைகள் பயன்படுத்தி செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  29.06.2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.07.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 18.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_11_Translation_Officer.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...